2,500 அரசுப் பள்ளிகளில் காலிப்பணியிடம் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வை விரைந்து நடத்த கோரிக்கை

2,500 அரசுப் பள்ளிகளில் காலிப்பணியிடம் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வை விரைந்து நடத்த கோரிக்கை
Updated on
2 min read

சி.பிரதாப்

சென்னை

தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு தாமதம் காரண மாக அனைத்து பள்ளிகளிலும் பராமரிப்பு பணிகள் பாதிக்கப் பட்டுள்ளதாக ஆசிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தமிழக பள்ளிக்கல்வியின்கீழ் 37,211 அரசுப்பள்ளிகள் இயங்குகின் றன. இதில் 46 லட்சம் மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். 2.6 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரி கின்றனர். ஆசிரியர் பதவி உயர்வு, பணியிட மாறுதல் கலந் தாய்வு ஆண்டுதோறும் மே மாதம் நடைபெறும். ஆனால், இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் காரணமாக தாமதமானது. பின்னர் இணைய தளம் வழியாக ஜூலை 8 முதல் 15-ம் தேதி வரை கலந்தாய்வு நடத்தப் படும் என்று கடந்த ஜூன் இறுதி யில் கல்வித்துறை அறிவிப்பு வெளி யிட்டது. தொடர்ந்து அதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்றன.

இந்நிலையில் ஒரே பள்ளியில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணிபுரிந்தவர்களுக்கு மட்டுமே இடமாறுதல் தரப்படும் என்ற கலந் தாய்வு விதியை தளர்த்தக் கோரி நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இதன்காரணமாக கலந்தாய்வை உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்தது.

இதற்கிடையே தமிழகம் முழு வதும் 2,500-க்கும் அதிகமான அரசுப் பள்ளிகளில் தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை பதவி உயர்வு மூலம் நிரப்ப திட்டமிட்டு, தகுதியான ஆசிரியர்கள் பட்டியலையும் கல்வித்துறை தயார் செய்துவிட்டது. உயர் நீதிமன்ற உத்தரவு காரணமாக தலைமையாசிரியர் பணியிடங்கள் நிரப்புவதில் தாம தம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்தப் பள்ளிகளில் பராமரிப்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் முன் னாள் தலைவர் மோசஸ் கூறியதா வது: ஒரு பள்ளி தலைமையாசிரி யருக்கு கல்வியாண்டின் தொடக்கத் தில்தான் மாணவர் சேர்க்கை தொடங்கி அதிக வேலை இருக்கும். பெற்றோர் ஆசிரியர் கழகம், மேலாண்மைக் குழுக்கள் மூலம் தேவையான நிதி ஆதாரங்களை திரட்டி பள்ளியின் கட்டமைப்பு வசதி களை மேம்படுத்த முடியும். மாண வர்களுக்கான இலவசப் பொருட் களை பெற்றுத் தருதல், அரசின் நிதியுதவிக்கான ஆவணங்களை தயார் செய்தல் உட்பட இதர நிர்வாக பணிகளையும் கவனிக்க வேண்டும்.

மறுபுறம் பொறுப்பு பதவியில் இருப்பவர்களுக்கு போதுமான அதிகாரம் இல்லாததால் முழுமை யாக நிர்வாகம் செய்ய இயலாது. ஏனெனில், தலைமையாசிரியர் கையொப்பம் இல்லாமல் பள்ளி வங்கிக்கணக்கில் இருந்து நிதியை எடுப்பதில் பல்வேறு சிரமங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு முறை யும் மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் ஒப்புதல் கடிதம் பெற வேண்டிய நிலை உள்ளது.

இப்போதுதான் அரசுப்பள்ளி களில் மாணவர் சேர்க்கை அதிகரித் துள்ளது. அதை தக்கவைக்க பள்ளிகளின் கட்டமைப்பு வசதி களை முறையாக பராமரித்து மேம்படுத்த வேண்டும். எனவே, உயர் நீதிமன்ற வழக்குகளை முடித்து கலந்தாய்வு பணிகளை விரைவாக நடத்தி முடிக்க தமிழக அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in