

சென்னை
தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ள தாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள் ளனர்.
இது தொடர்பாக அவர்கள் கூறியதாவது: தமிழகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் காற்று சுழற்சி ஏதும் இல்லை. கேரளா, கர்நாடகா மாநிலங் களிலும் குறிப்பிடும்படியாக மழைப்பொழிவு இல்லை. அதன் காரணமாக தமிழகத்தில் மழை வாய்ப்புகள் குறைந்துள்ளன. தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு வெப்பச் சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை, புறநகர் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத் துடன் காணப்படும். லேசான மழை பெய்யவும் வாய்ப்புள்ளது.
ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கோவை மாவட்டம் வால்பாறை யில் 3 செ.மீ., சின்னக்கல்லார், நீல கிரி மாவட்டம் கூடலூர் சந்தை, தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளம் ஆகிய இடங்களில் தலா 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப் பாறை, பூதபாண்டி, நீலகிரி மாவட்டம் தேவாலா, நடுவட்டம், நெல்லை மாவட்டம் ராதாபுரம் ஆகிய இடங்களில் தலா 1 செ.மீ. மழை பெய்துள்ளது.