துரித பேருந்து சேவை திட்டத்தின் மூலம் 3 நிமிடங்களுக்கு ஒரு பேருந்து இயக்கப்படும்: போக்குவரத்து துறை அதிகாரிகள் தகவல்

துரித பேருந்து சேவை திட்டத்தின் மூலம் 3 நிமிடங்களுக்கு ஒரு பேருந்து இயக்கப்படும்: போக்குவரத்து துறை அதிகாரிகள் தகவல்
Updated on
2 min read

சென்னை 

சென்னையில் செயல்படுத்தப்பட உள்ள துரித பேருந்து சேவை திட்டம் (பிஆர்டிஎஸ்) மூலம் பிரத்யேக பாதை அமைத்து 3 நிமிடங்களுக்கு ஒரு துரித பேருந்து சேவை அளிக்க முடியும். மேலும், ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு நிறுத்தம் அமைக்க திட்டமிட்டுள்ளதாக அரசு போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், சுற்றுச் சூழலை பாதுகாக்கவும் பல்வேறு தொலைநோக்குத் திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தி வருகின்றன. மெட்ரோ ரயிலைத் தொடர்ந்து துரித பேருந்து சேவை திட்டத்தை (பிஆர்டிஎஸ்) தமிழக அரசு செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.

இதற்காக, அமைக்கப்பட்ட அரசு அதிகாரிகள் குழுவினர் அகமதா பாத்துக்கு சென்று அங்குள்ள பிஆர்டிஎஸ் வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அதன் அடிப்படையில் சென்னையிலும் இத்திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு கடந்த சில மாதங் களாக முக்கியமான சாலை களில் பல்லவன் கன்சல்டன்சி மூலம் ஆய்வு மேற்கொண்டது. இதற் கிடையே, அரும்பாக்கத்தில் நேற்று நடந்த கருத்துக்கேட்பு கூட்டத் தில் பெரும்பாலான மக்கள் இத்திட்டத்தை வரவேற்றுள்ளனர்.

இதுதொடர்பாக அரசு போக்கு வரத்துத் துறை அதிகாரிகள் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியதாவது:

சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து விரைவாகப் பயணத்தை மேற்கொள்ளும் வகையில் பிஆர்டிஎஸ் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த உள் ளது. ஏற்கெனவே உள்ள சாலை களின் நடுப்பகுதியில் இந்த பேருந்து நிறுத்தம் அமைக்கப்படும். எனவே, புதியதாக நிலங்களைக் கையகப்படுத்தப்பட மாட்டாது. மேலும், தற்போதுள்ள மாநகரப் பேருந்துகளின் நிறுத்தங்கள் எதுவும் நீக்கப்படாது. முதல் கட்டமாக தேர்வு செய்யப்பட்டுள்ள 7 வழித்தடங்களில் சாலைகளில் 113 கி.மீ தூரம் சுமார் 200-க்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்பட உள்ளன. ஒவ் வொரு நிறுத்தத்திலும் பயணிகள் வந்து செல்ல வசதியாக சுமார் 700 மீட்டருக்கு நடைமேடை அமைக்கப்படும். ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு நிறுத்தம் அமைக்க திட்டமிட்டுள்ளோம்.

பேருந்துகளைப் பராமரிக்க 7 பணிமனைகள் அமைக்கப்படும். நிறுத்தத்தின் நுழைவாயிலில் டிக்கெட் கவுன்ட்டர்கள் அமைக்கப் படும். போக்குவரத்து சிக்னல்கள் அமைத்து பாதசாரிகள் பாதுகாப் பாக கடந்து செல்லவும் வசதி கள் ஏற்படுத்தப்படும். இந்த தடத் தில் முதல்கட்டமாக ஏசி பேருந்து களை இயக்கவுள்ளோம். இப் பேருந்துகளின் இருபுறமும் தானி யங்கி கதவுகள் இருக்கும். தற்போது இயக்கப்படும் மாநகர போக்குவரத்து கழகத்தின் சொகுசு பேருந்து கட்டணம்தான் இதற்கும் வசூலிக்கப்படும்.

அனைத்து நிறுத்தங்களிலும் வாகன நிறுத்தும் வசதி கிடை யாது. வாய்ப்புள்ள முக்கிய நிறுத் தங்களில் மட்டுமே வாகன நிறுத்தும் வசதி செய்யவுள்ளோம். மெட்ரோ, மோனோ ரயில் திட்டங்களைக் காட்டிலும் பிஆர்டிஎஸ் திட்டத் துக்கு செலவு குறைவாகும். உதா ரணத்துக்கு ரூ.1000 கோடி செலவு செய்தால் 67 கி.மீ தூரத்துக்கு பிஆர்டிஎஸ் திட்டத்தை செயல் படுத்த முடியும். மக்களிடம் கருத் துக் கேட்பு கூட்டம் முடிந்து பிறகு, அவர்களின் கருத்துகளை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வோம். அந்த வகையில், பயணிகளுக்கான வசதிகளை மேலும் மேம்படுத்த வாய்ப்புகள் உள்ளன.

இவ்வாறு அதிகாரிகள் தெரி வித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in