

ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோபாலா கோஷத்து டன் தேரை வடம் பிடித்து இழுத் தனர்.
ஆண்டாள் அவதரித்த தினமான ஆடிப்பூரத்தைக் கொண்டாடும் விதமாக வில்லிபுத்தூர் ஆண் டாள் கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா ஜூலை 27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி யது. 12 நாட்கள் நடைபெறும் இத் திருவிழாவில் முக்கிய நிகழ்வான ஆடிப்பூரத் தேரோட்டம் நேற்று நடைபெற்றது.
இதையொட்டி மதுரை அழகர் கோயில் சுந்தரராஜப் பெருமாள், ஸ்ரீரங்கம் ரெங்கநாத சுவாமி ஆகிய கோயில்களில் இருந்து கொண்டு வரப்பட்ட பட்டு வஸ்திரங்கள், மங்களப் பொருட்கள் ஆண்டாள், ரெங்கமன்னார் ஆகியோருக்கு சாற்றப்பட்டன. அதைத் தொடர்ந்து வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் முழங்க தேரில் சுவாமிகள் எழுந்தருளினர்.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சிவ ஞானம், உயர் நீதிமன்ற நீதிபதிகள் 17 பேர், மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி முத்துசாரதா, சட்டப் பேரவை உறுப்பினர்கள் ராஜவர்மன், சந்திரபிரபா, ஸ்ரீஸ்ரீஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் ஆகி யோர் காலை 8 மணிக்கு தேரை வடம்பிடித்து இழுத்து தேரோட் டத்தை தொடங்கி வைத்தனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதி களில் இருந்து வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரின் 7 வடங்களை பிடித்திழுக்க "கோவிந்தா, கோபாலா" கோஷத் துடன் தேரோட்டம் நடைபெற்றது. நான்கு மாட வீதிகள் வழியாக வலம் வந்த தேர் காலை 10.20 மணிக்கு நிலையை அடைந்தது.
தேரோட்டத்தையொட்டி மாவட் டக் காவல் கண்காணிப்பாளர் ராஜராஜன் தலைமையில் 800-க் கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.