பட்டிமன்றத்தில் விவாதிக்கத் தயாரா?- ஸ்டாலினுக்கு ராஜேந்திர பாலாஜி சவால்

பட்டிமன்றத்தில் விவாதிக்கத் தயாரா?- ஸ்டாலினுக்கு ராஜேந்திர பாலாஜி சவால்
Updated on
1 min read

ஸ்ரீவில்லிபுத்தூர்

தமிழகத்தை யார் ஆளவேண்டும் என பட்டிமன்றத்தில் விவாதிக்கத் தயாரா என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, திமுக தலைவர் ஸ்டாலினுக்கு சவால் விடுத்துள்ளார். 

ஸ்ரீவில்லிபுத்தூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ''திராவிட இயக்கத் தலைவன், பச்சைத் தமிழன் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை ஆட்சி செய்கிறார். பிறகு ஏன் தமிழன்தான் ஆளவேண்டும் என்று சொல்கிறீர்கள்?

தமிழன்தானே தமிழ்நாட்டை ஆள்கிறார்? தமிழன் யார்? தமிழ் எது? இதுகுறித்துப் பெரிய பட்டிமன்றமே நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். நானும் தயார். ஸ்டாலின் தயாராக இருக்கிறாரா? இல்லை ஸ்டாலின் ஆள் அனுப்புவாரா? பார்த்துவிடுவோம்.

எங்கள் தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழர்தான். இதை ஆதாரத்துடன் சொல்வோம். மக்கள் எல்லோரும் இதை ஏற்றுக்கொண்டார்கள். ஆனால் ஸ்டாலினால் இதைச் சொல்ல முடியுமா?'' என்று கேள்வி எழுப்பினார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in