எல்ஐசி முதல் ஆயிரம் விளக்கு வரையுள்ள அண்ணா சாலையில் பணிகள் முழுமையாக முடிவடையவில்லை: இருவழிப் பாதையாக மாற்றுவதில் தாமதம்

எல்ஐசி முதல் ஆயிரம் விளக்கு வரையுள்ள அண்ணா சாலையில் பணிகள் முழுமையாக முடிவடையவில்லை: இருவழிப் பாதையாக மாற்றுவதில் தாமதம்
Updated on
1 min read

சென்னை

அண்ணா சாலையில் எல்ஐசி முதல் ஆயிரம் விளக்கு வரையுள்ள பகுதி யில் பணிகள் முடிவடையாததால், அதை இருவழிப்பாதையாக மாற்று வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

சென்னை அண்ணா சாலையில் மெட்ரோ பணிகள் நிறைவடைந்த சாலைப்பகுதிகள், இருவழிப் பாதை யாக மாற்றப்பட்டன. எல்ஐசி முதல் ஆயிரம் விளக்கு இடையேயான உள்ள சாலை மட்டும் இருவழிப் பாதை யாக்கப்படாமல் இருந்து வருகிறது. தற்போது இந்தப் பகுதியில் சென்டர் மீடியன் சுவர், சாலை ஓரத்தில் நடந்து செல்பவர்களுக்கான இடவசதி, சிக்னல்கள் அமைப்பது போன்ற பணி கள் இன்னும் முழுமை அடையாமல் உள்ளன. இந்த பணிகளை மெட்ரோ ரயில் நிர்வாகம் செய்து வருகிறது.

இன்று (ஆக.4-ம் தேதி) முதல் இந்தப் பகுதி இரு வழிப்பாதையாக மாற்றப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பணிகள் முடியாததால் இன்னும் கால தாமதமாகவே இரு வழிப்பாதையாக மாற்ற உள்ளனர்.

இதுகுறித்து சில அதிகாரிகளிடம் கேட்டபோது, “தற்போது மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் தான் இந்தச் சாலைப் பகுதி உள்ளது. அவர்கள் பணியை முடித்த பின்னர் நெடுஞ்சாலைத் துறையிடம் சாலையை ஒப்படைப்பர். அவர்கள் சாலையை ஆய்வு செய்து போக்கு வரத்து காவல் துறையினரிடம் ஒப் படைப்பர். போக்குவரத்து போலீஸார் ஆய்வு செய்த பின்னரே சாலை இரு வழிப்பாதையாக்கப்படும்” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in