

சென்னை
சென்னையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.264 உயர்ந்து ரூ.27,328-க்கு நேற்று விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், நகை வாங்கும் மக்கள் மத்தியில் தயக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
சர்வதேச அளவில் தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம், பங்குச்சந்தை வீழ்ச்சி, ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலையில் கடந்த சில மாதங்களாக ஏற்றமும், இறக்கமும் இருந்து வருகிறது.
இந்தியாவில் தங்கம் விலை குறைவைவிட, உயர்வு அதிகமாக இருந்து வருகிறது. அமெரிக்கா வில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்களால் பிற துறைகளில் முதலீடு செய்வது குறைந்து, தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது.
சென்னையில் தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.264 உயர்ந்து ரூ.27,328-க்கு விற்பனை செய்யப்பட்டது. 22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.3 ஆயிரத்து 416-க்கு விற்கப்பட்டது.
இதுவே, நேற்று முன்தினம் ரூ.3 ஆயிரத்து 383-க்கு விற்கப்பட்டது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், நகை வாங்கும் மக்கள் மத்தியில் தயக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் கடந்த சில நாட்களில் 30 சதவீதம் வரையில் விற்பனை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.