கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் சேர்க்கை நடைமுறை, கட்டண விவரம் இணையதளத்தில் வெளியிட வேண்டும்: துணைவேந்தர்களுக்கு யுஜிசி அதிரடி உத்தரவு

கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் சேர்க்கை நடைமுறை, கட்டண விவரம் இணையதளத்தில் வெளியிட வேண்டும்: துணைவேந்தர்களுக்கு யுஜிசி அதிரடி உத்தரவு
Updated on
1 min read

மாணவர் சேர்க்கை நடைமுறை கள், கல்விக் கட்டணம், அடிப்படை வசதிகள் போன்றவை தொடர்பான விவரங்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு யுஜிசி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக பல்கலைக் கழக மானியக்குழுவின் (யுஜிசி) செயலாளர் ஜஸ்பாஸ் எஸ்.சந்து, பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களுக்கு அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் சேரும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் வசதிக்காக கல்வி நிறுவனங்கள் தொடர்பான விவரங்களை இணையதளத்தில் வெளியிட்டால் அது அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே, கீழ்க்காணும் விவரங்களை பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட வேண்டும்.

மாணவர் சேர்க்கை நடை முறைகள், ஒவ்வொரு படிப்பிலும் உள்ள இடங்கள்.

துறைவாரியாக ஆசிரியர்களின் முழு விவரங்கள்.

குறிப்பிட்ட கல்வி ஆண்டில் மேற்கொள்ளப்பட உள்ள செயல்பாடுகள்.

மாணவர்களுக்கான தங்குமிட வசதி, போக்குவரத்து வசதி உள்ளிட்ட வசதிகள்.

ஆராய்ச்சி செயல்பாடுகள்.

படித்து முடித்து வெளியே செல்லும் மாணவர்களின் வேலைவாய்ப்பு நிலை.

சட்டப்பூர்வ அமைப்புகளின் அங்கீகார விவரங்கள்.

பாடப்பிரிவு வாரியாக கல்விக் கட்டணம்.

மாணவர் குறைதீர்ப்பு பிரிவு விவரங்கள், அவர்களுக்கு உதவி செய்வதற்காக நியமிக் கப்பட்டுள்ள ஆசிரியர் விவரங் கள்.

கல்வி உதவித்தொகை விவரங்கள்.

தர அங்கீகார நிலை.

அரசு மற்றும் இதர நிதி யுதவி அமைப்புகளால் சீர்மிகு மையங்களாக அங்கீகரிக்கப் பட்ட துறைகள் தொடர்பான விவரங்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சேர்க்கை நடைமுறைகள், ஒவ்வொரு படிப்பிலும் உள்ள இடங்கள். துறைவாரியாக ஆசிரியர்களின் முழு விவரங்கள் வெளியிட வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in