

வேலூர்
வேலூர் மக்களவைத் தொகுதிக் கான தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் ஓய்கிறது. முன்னதாக, இறுதி கட்ட பிரச்சார மாக வேலூரில் அரசியல் கட்சியினரும், வேட்பாளர்களும் இன்று இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளனர்.
வேலூர் மக்களவைத் தேர்தல் பணப் பட்டுவாடா புகார் காரணமாக கடந்த ஏப்ரல் 16-ம் தேதி நிறுத்தப்பட்டது. மூன்று மாதங்கள் இடைவெளிக்கு பிறகு வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் நாளை மறுதினம் (5-ம் தேதி) நடைபெற உள்ளது.
இதில், அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம், திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி உள்ளிட்ட 28 பேர் போட்டியிடுகின்றனர்.
வேலூர் மக்களவைத் தேர்த லில் 1,553 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 14 லட்சத்து 32 ஆயிரத்து 555 பேர் வாக்களிக்க உள்ளனர். தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக 20 கம்பெனி துணை ராணுவப் படையினர் வந்துள்ள னர். தேர்தல் பணியில் 7 ஆயிரத் துக்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப் பட உள்ளனர். ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரி வளாகத்தில் வரும் 9-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
வேலூர் மக்களவைத் தேர்த லில் அதிமுக, திமுக இடையே நேரடிப் போட்டியாக இருந்தாலும் அமமுக, மக்கள் நீதி மய்யம் கட்சிகளின் தேர்தல் புறக்கணிப்பால் மூன்றாவது மாற்றுக் கட்சியாக நாம் தமிழர் கட்சி களத்தில் இருக் கிறது. அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வ மும் தலா மூன்று நாட்கள் பிரச் சாரம் செய்துள்ளனர். இருவருமே ஒரு நாளைக்கு இரண்டு சட்டப் பேரவை தொகுதிகள் வீதம் பிரச்சார பொதுக் கூட்டங்களில் பங்கேற்றுப் பேசினர். அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜகவைத் தவிர்த்து அன்புமணி ராமதாஸ், ஜி.கே.வாசன், பிரேம லதா விஜயகாந்த், கிருஷ்ணசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சி தலை வர்கள் ஒரு நாள் பிரச்சாரம் மேற் கொண்டனர்.
திமுக வேட்பாளர் கதிர்ஆனந் துக்கு ஆதரவாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மூன்று நாட்கள் வீதம் இரண்டு கட்டங்களாக பிரச்சாரம் மேற்கொண்டார். ஒரு நாளைக்கு ஒரு சட்டப்பேரவை தொகுதி வீதம் காலையில் மக்கள் சந்திப்பு, ஊராட்சி சபை கூட்டங் களாகவும் வேனில் சென்றும் பிரச்சாரம் மேற்கொண்டார். உதயநிதி ஸ்டாலினும் மூன்று நாட்கள் வேலூரில் தங்கியிருந்து பிரச்சாரம் மேற்கொண்டார். கூட்டணி கட்சி தலைவர்களான காதர் மொய்தீன், ஜவாஹிருல்லா, பாலகிருஷ்ணன், முத்தரசன், உள்ளிட்டோரும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமிக்கு ஆதரவாக அக்கட்சி யின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சட்டப்பேரவை தொகுதி வாரியாக பிரச்சார பொதுக்கூட் டத்தில் பங்கேற்று வாக்கு சேகரித் தார். வேலூர் மக்களவைத் தேர்தலுக்கான இறுதி கட்ட பிரச்சாரம் இன்று மாலை 6 மணி யுடன் முடிகிறது. இதையொட்டி அரசியல் கட்சியினரும் வேட்பாளர் களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிமுக சார்பில் இன்று பிற் பகல் வேலூர் தொரப்பாடி எம்ஜிஆர் சிலை அருகில் தொடங்கும் ஊர்வலம் அண்ணா சாலை, பேலஸ் கபே சந்திப்பு, காட்பாடி சாலை, பென்ஸ்பார்க், மீண்டும் சிஎம்சி சாலை வழியாக ஆற்காடு சாலை, சத்துவாச்சாரி வரை நடைபெறுகிறது.
அதேபோல், திமுக சார்பில் வேலூர் மண்டித் தெருவில் நடை பெறும் பிரச்சார பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றுப் பேசுகின்றனர்.