மதுரையில் ‘பஸ்போர்ட்’அமைவது எப்போது? - ஆளும்கட்சியினரின் ‘ஈகோ’வால் கிடப்பில் பிரம்மாண்ட திட்டம் 

மதுரையில் ‘பஸ்போர்ட்’அமைவது எப்போது? - ஆளும்கட்சியினரின் ‘ஈகோ’வால் கிடப்பில் பிரம்மாண்ட திட்டம் 
Updated on
1 min read

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை

மதுரையில் ‘பஸ்போர்ட்’டுக் காக திருமங்கலம் அருகே கரடிக்கல் கிராமத்தில் 56 ஏக்கர் இடமும், நாகமலைப்புதுக்கோட்டை அருகே மேலக்குயில்குடியில் 54.69 ஏக்கர் இடமும், மாட்டுத் தாவணி அருகே மற்றொரு இடமும் ஆய்வு செய்யப்பட்டது. முடிவில் கரடிக்கல்லில் தேர்வு செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது.

முதற்கட்டப் பணிக்காக ரூ.90 லட்சம் ஒதுக்கீடும் செய்யப் பட்டதாக அதிகாரிகள் தெரிவித் தனர். ஆனால், ‘பஸ்போர்ட்’ அமை வதற்கான எந்த அறிகுறியும் இல்லை என மக்கள் குற்றம்சாட்டு கின்றனர். இந்தத் திட்டம் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையைப்போல் மத்திய அரசின் நிதியுதவியில் நடக்கும் பிரம்மாண்ட திட்டம். ஆனால், இடம் தேர்வு செய்வதில் ஆளும்கட்சியினரிடையே நீடிக்கும் ‘ஈகோ’வால் இந்தத் திட்டம் தள்ளிப்போய்க் கொண்டே இருக்கிறது. இது குறித்து தகவல் அறியும் உரிமைச்சட்ட ஆர்வலர் ஹக்கீம் கூறியதாவது: நடுத்தர ஏழை மக்கள், வெளியூர்களில் இருந்து வந்து ‘பஸ்போர்ட்’ இறங்கினால் டவுன் பஸ்சில் ஏறி வீட்டுக்குச் செல்வதாக இருக்க வேண்டும். ஆனால், ஆளும்கட்சியினர் அவரவர்களுக்குச் சாதகமான பகுதிகளில் ‘பஸ்போர்ட்’டை கொண்டு செல்ல முடிவு செய் தனர். இதற்காக தேர்வு செய்த இடங்கள், மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பஸ்நிலையத்தில் இருந்து 30 கி.மீ., தொலைவில் உள்ளன. ‘பஸ்போர்ட்’ புறநகரைத் தாண்டி கிராமப் பகுதிக்குக் கொண்டு சென்றால் மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்காது. இடம் தேர்வு செய்வதில் உள்ள குளறுபடியால் திட்டம் முடங்கி உள்ளது, என்று கூறினார்.

சேலத்தில் இடம் தேர்வு செய்து ‘பஸ்போர்ட்’டுக்கு விரைவில் பூமி பூஜை நடக்க உள்ளது. கோவையில் மத்திய அரசை எதிர்பார்க்காமல் தமிழக அரசே பிரம்மாண்டமாக பஸ்போர்ட்டை கட்ட முடிவு செய்துள்ளது. அதனால், சேலம், கோவையில் ‘பஸ்போர்ட்’ அமைவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஆனால், மதுரையில் அமையும் இடம் பற்றி இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகாமல் உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in