

த.சத்தியசீலன்
கோவை
பொதுமக்களின் செல்போன் களுக்கு டெலி மார்க்கெட்டிங் மற் றும் தொலைத்தொடர்பு நிறுவனங் களில் இருந்துவரும் அழைப்புகள் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. வாடிக்கையாளர்களின் விவரங்கள் தனியாருக்கு விற்பனை யாவதாக நுகர்வோர் அமைப்பினர் புகார் தெரிவிக்கின்றனர்.
செல்போன் பயன்படுத்தும் பொதுமக்கள், பல்வேறு தொலைத் தொடர்பு நிறுவனங்களின் சிம்கார்டு களை பயன்படுத்தி வருகின்றனர். இணைய வசதியுடன் கூடிய பிரீபெய்டு, போஸ்ட் பெய்டு திட்டங்களைப் பெரும்பாலானோர் பயன்படுத்துகின்றனர்.
தொலைத்தொடர்பு நிறுவனங் கள், தங்களுடைய நிறுவனத்தின் திட்டங்களை வாடிக்கையாளர்களி டையே பிரபலப்படுத்தும் வகை யில், நாள்தோறும் அவர்களைத் தொடர்பு கொண்டு பேசுவதை வாடிக்கையாக்கிக் கொண்டுள் ளன. இது வாடிக்கையாளர்களுக்கு பெரும் தொல்லையாக உள்ளது.
இதுகுறித்து கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பின் செயலர் நா.லோகு கூறியதாவது:
இவ்வகை அழைப்புகளில் சாமா னியன் முதல் உயர் பொறுப்பில் இருப்பவர்கள் வரை யாரையும் விட்டு வைப்பதில்லை. தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்களின் திட்டங்களை வாடிக்கையாளர் களுக்கு மார்க்கெட்டிங் செய்வது டன், அவர்களின் விவரங்களை ரியல் எஸ்டேட், நிதி நிறுவனங் களுக்கும் விற்பனை செய்வதாக பொதுமக்கள் தரப்பில் கூறப்படு கிறது.
வாடிக்கையாளர் எண், பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை மிகவும் சரியாகக் கூறி டெலி மார்க் கெட்டிங் பிரதிநிதிகள் அழைப்பது பொதுமக்களின் சந்தேகத்தை உறுதிப்படுத்துகிறது.
அரசு துறைகள், தனியார் நிறு வனங்கள், அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் என சமு தாயத்தில் முக்கியமானவர்களின் விவரங்களை தனியார் சேவை நிறு வனங்கள் சேகரித்து வைத்துள்ளன. இவர்களின் தொடர்பு எண் தேவைப்படுவோர், தனியார் சேவை நிறுவனத்தைத் தொடர்புகொண்டு, சம்பந்தப்பட்டவர்களின் தொடர்பு எண் கேட்டால் குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கின்றனர்.
இவர்கள் தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் இருந்தும் வாடிக் கையாளர்களின் விவரங்களை விலைக்கு வாங்குவதாகக் கூறுகின்றனர்.
இவர்களிடம் இருந்து குறிப்பிட்ட தொகையைக் கொடுத்து வாங்கும் ரியல் எஸ்டேட், நிதி நிறுவனங்கள் டெலி மார்க்கெட்டிங் மூலமாக வாடிக்கையாளர்களை தொடர்ச்சியாக தொடர்பு கொள் கின்றன.
வாங்கும் திறன் இல்லாதவர்கள், நிதி தேவையில்லாதவர்கள் தங் களுக்கு தற்போது தேவையில்லை என்று கூறினாலும், உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு தெரிவியுங்கள் என்று சளைக்காமல் உரையாடுகின்றனர்.
கோவையில் இருப்பவர் களுக்கு சென்னையில் நிலம் வேண்டுமா? சென்னையில் உள்ள நிதி நிறுவனத்தில் கடன் வசதி வேண்டுமா? ஓசூரில் நிலம் விற்பனை போன்றவை சமீபத்தில் பொதுமக்களிடம் அதிகரிக்கும் டெலி மார்க்கெட்டிங் அழைப்புகள்.
ஒருமுறை அவர்களிடம் கண்டிப்பாகப் பேசி இணைப்பை துண்டித்து விட்டால், அந்த எண்ணை வேறொரு நிறுவனத் துக்கு கொடுத்து விடுகின்றனர். மறுபடியும் அவரிடம் முதலில் இருந்து வாடிக்கையாளர் விளக்க வேண்டும். ஆக, பொதுமக்களுக்கு இவர்களின் இடையூறு தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது என்றார்.
“இவ்வகை அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் ஆன்லைன் மோசடிகளுக்கும் வழிவகுக்கின் றன. குறுஞ்செய்தியில் ஆன்லை னில் லாட்டரி விழுந்திருப்பதாகவும், அதற்கான வரியைச் செலுத்தினால் முழு தொகையும் பெற்றுக் கொள்ளலாம் என்பதும், குலுக்கல் முறையில் வாடிக்கையாளரின் செல்போன் எண்ணுக்கு முதல் பரிசு கிடைத்திருப்பதாகவும், அதற்கு கோடிக்கணக்கில் பரிசுத்தொகை காத்திருப்பதாகவும் தகவல் அனுப்பி, வாடிக்கையாளர்களுக்கு வலை விரிக்கின்றனர். அதில் குறிப் பிட்டுள்ள தற்காலிக செல்போன் எண் அல்லது போலி மின்னஞ்சல் முகவரிக்கு பதிலளிப்பவர்கள் மோசடி வலையில் வீழ்கின்றனர். இதேபோல, வங்கியில் பேசுவதாக வரும் அழைப்புகள், பொதுமக்களின் வங்கி கணக்கு எண், ஏடிஎம் அட்டை எண், ரகசிய குறியீடு போன்றவற்றை கேட்டு ஏமாற்றுகின்றனர். இதில் சாமானியர் முதல் நன்றாக விவரம் தெரிந்தவர்கள் கூட ஏமாந்துள்ளனர். எனவே, தொலைத்தொடர்பு நிறுவனங்களின் மோசடியில் இருந்து வாடிக்கையாளர்களான பொதுமக்களைப் பாதுகாக்க, தேசிய ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்கின்றனர், சமூக ஆர்வலர்கள்.