

பிளஸ் 2 பொதுத் தேர்வில் தமிழை முதல் மொழிப்பாடமாக எடுத்து மாநில அளவில் முதல் இடத்தைப் பிடித்த 21 மாணவ, மாணவிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா கடந்த ஜூன் 29-ம் தேதி தலைமைச் செயலகத்தில் ரூ.10.5 லட்சத் துக்கான காசோலைகளை யும் பாராட்டுச் சான்றிதழ் களையும் வழங்கி கவுர வித்தார்.
இந்நிலையில், பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் 2-ம், 3-ம் இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கும் இதேபோல், எஸ்எஸ்எல்சி தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்தவர்களுக் கும் தமிழக அரசு சார்பில் பரிசு கள் மற்றும் பாராட்டுச் சான் றிதழ்கள் வழங்கும் விழா சென்னை சேத்துப்பட்டில் உள்ள சென்னை கிறிஸ்தவக் கல்லூரி மேல் நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்றது.
பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வில் 2-ம் இடம் பெற்ற 26 மாணவ-மாணவிகளுக்கும், 3-ம் இடத்தைப் பிடித்த 23 பேருக் கும், இதேபோல், 10-ம் வகுப்பு தேர்வில் முதலிடம் பெற்ற 51 பேருக்கும், 2-ம் இடம் பிடித்த 194 பேருக்கும், 3-ம் இடம் பெற்ற 694 பேருக் கும் (மொத்தம் 988 பேர்) ரூ.1 கோடியே 68 லட்சம் பரிசும், பாராட்டுச் சான்றிதழ் களும் வழங்கப்பட்டன. அவற்றை அமைச்சர்கள் எடப்பாடி கே.பழனிச்சாமி, பா.வளர் மதி, என்.சுப்பிரமணியன், கே.சி.வீரமணி, எஸ்.அப்துல் ரகீம் ஆகியோர் வழங்கினர்.