Published : 03 Aug 2019 08:32 AM
Last Updated : 03 Aug 2019 08:32 AM

கருணாநிதி முதலாம் ஆண்டு நினைவு தினம்; ஆக. 7-ல் அமைதிப் பேரணி, பொதுக்கூட்டம் ஏற்பாடு: தொண்டர்கள் திரளாக பங்கேற்க ஸ்டாலின் அழைப்பு

சென்னை

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னையில் வரும் 7-ம் தேதி அமைதிப் பேரணியும், பொதுக்கூட்டமும் நடக்கிறது. இதில் திமுகவினர் பெருந்திரளாகப் பங்கேற்க வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஐந்து முறை தமிழக முதல்வராகவும்,  சுமார் 50 ஆண்டுகள் திமுகதலைவராகவும் இருந்த கருணாநிதி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7-ம்
தேதி காலமானார். அவரது முதலாம் ஆண்டு நினைவு தினம் வரும் 7-ம் தேதி வருகிறது. அதையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு திமுக தலைமை ஏற்பாடு செய்துள்ளது.

இது தொடர்பாக திமுக தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் ஸ்டாலின் கூறியிருப்பதாவது:

'உடன்பிறப்பே' என்ற ஒற்றைச் சொல்லால் திராவிட இயக்கத்தின் லட்சியத்தை தட்டியெழுப்பிய கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு தினம், ஆகஸ்ட் 7-ம் தேதி  வருகிறது. அண்ணா நினைவு நாளில் அமைதிப் பேரணி நடத்தும் வழக்கத்தை 50 ஆண்டுகளாக செயல்படுத்தியவர் கருணாநிதி. அந்த வழியில் கருணாநிதியின் முதலாமாண்டு நினைவு நாளான வரும் 7-ம் தேதி காலை 8 மணிக்கு சென்னை அண்ணா சாலை அண்ணா சிலை அருகில் இருந்து மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடம் வரை அமைதிப் பேரணி நடக்கவுள்ளது. 

கோடம்பாக்கத்தில் உள்ள  ‘முரசொலி'  நாளிதழ் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் முழுஉருவச் சிலையை 7-ம் தேதி மாலை 5 மணிக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி திறந்து வைக்கி றார். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் இந்த விழா நடக்கிறது.

அதைத் தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் மம்தா பானர்ஜி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, கவிஞர் வைரமுத்து ஆகி
யோர் பங்கேற்று உரையாற்றுகின்றனர். இந்நிகழ்ச்சிகளில் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறி யுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x