வட கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

வட கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு
Updated on
1 min read

சென்னை

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ந.புவியரசன் கூறியதாவது:

தமிழகம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் காற்று சுழற்சி ஏதும் இல்லாமல் இருந்தது. அதனால் கடந்த சில நாட்களாக மழை குறைந்திருந்தது. அனைத்து மாவட்டங்களிலும் வறண்ட வானிலையும் நிலவியது. இதற்கிடையே மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் வடக்கு ஆந்திர கடலோரப் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. அதன் காரணமாக கடலோர மாவட்டங்களான திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, காரைக்கால், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் இரு தினங்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதர மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் 1 செமீ மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு ந.புவியரசன் தெரிவித்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in