நீர் பாசனத்திற்கு ஆழ்துளை கிணறு அமைக்க 50 சதவீதம் மானியம்: விவசாயிகளை ஊக்கப்படுத்த தோட்டக்கலைத்துறை ரூ.75 கோடி ஒதுக்கீடு

நீர் பாசனத்திற்கு ஆழ்துளை கிணறு அமைக்க 50 சதவீதம் மானியம்: விவசாயிகளை ஊக்கப்படுத்த தோட்டக்கலைத்துறை ரூ.75 கோடி ஒதுக்கீடு
Updated on
1 min read

தமிழகத்தில் காய்கறிகள், பழங்கள் சாகுபடியை அதிகரிக்க பாசன வசதியில்லாத இடங்களில் நீர்பாசனத்திற்கு ஆழ்துளை கிணறு போடுவதற்கு 50 சதவீதம் மானியம் வழங்கும் புது திட்டத்தை தோட்டக்கலைத்துறை தொடங்கி உள்ளது. இதற்காக ரூ.75 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

தமிழகத்தில் காய்கறிகள் 2 லட்சத்து 907 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது. 77.716 லட்சம் டன் காய்கறிகள் உற்பத்தி செய்யப்படுகிறது. காய்கறி உற்பத்தியில் தேசிய அளவில் தமிழகம் 9-வது இடத்தில் இருக்கிறது.

ஆனால், தற்போது பருவமழை பெய்யாததால் காய்கறி சாகுபடி 50 சதவீதத்திற்கு மேல் குறைந்துள்ளது. ஆற்றுக் கால்வாய் பாசனப்பகுதிகள் உள்ள இடங்கள், தண்ணீர் வசதியுள்ள கிணறுப் பாசனத்தில் மட்டுமே ஒரளவு காய்கறிகள், பழங்கள் சாகுபடி நடக்கிறது.

காய்கறிகள் தட்டுப்பாட்டால் ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து தற்போது தமிழகத்திற்கு காய்கறிகள் அதிகளவு விற்பனைக்கு வருகின்றன. காய்கறி சாகுபடிக்கு தண்ணீர் பாசனம் முக்கியம்.

தண்ணீர் பாசனவசதியில்லாத நிலங்களில் ஆழ்துளை கிணறு அமைத்து காய்கறி விவசாயம் செய்ய 50 சதவீதம் மானியம் கொடுத்து விவசாயிகளை ஊக்கப்படுத்த தோட்டக்கலைத்துறை முடிவு செய்துள்ளது.
 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in