சரக்கு கப்பலில் தூத்துக்குடிக்கு தப்பி வந்த மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமது அதீப்: மத்திய, மாநில உளவுத்துறையினர் தீவிர விசாரணை

அகமது அதீப்
அகமது அதீப்
Updated on
2 min read

ரெ.ஜாய்சன்

தூத்துக்குடி

சரக்கு கப்பலில் தூத்துக்குடிக்கு தப்பி வந்த மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமது அதீப்பிடம் உளவுத் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலத்தீவை சேர்ந்த முராய்ப் என்பவருக்கு சொந்தமான `விர்கோ- 9' என்ற சிறிய ரக இழுவை சரக்கு கப்பல், கருங்கற்களை ஏற்றிக் கொண்டு தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் இருந்து கடந்த மாதம் 11-ம் தேதி மாலத்தீவுக்கு சென்றது. இந்த கப்பலில் தூத்துக் குடியைச் சேர்ந்த மாலுமி போஸ்கோ மற்றும் இந்தோனேசியாவைச் சேர்ந்த 8 மாலுமிகள் பணியில் இருந்தனர்.

மாலத்தீவில் உள்ள மாலே துறை முகத்தில் சரக்கை இறக்கிவிட்டு, வெற்று கப்பலாக கடந்த 27-ம் தேதி அங்கிருந்து தூத்துக்குடிக்கு இந்த கப்பல் புறப்பட்டது.

10-வது நபர்

கப்பலில் திடீரென படகில் வந்து ஒரு நபர் ஏறிக் கொண்டார். அந்நிய நபர் ஒருவர் கப்பலில் ஏறியது குறித்து, கப்பல் நிறுவனத்துக்கும், தூத்துக்குடியில் உள்ள கப்பல் முகவருக்கும், மாலுமி போஸ்கோ தகவல் தெரிவித்தார்.

முன்னாள் துணை அதிபர்

நேற்று காலையில் அந்த கப்பல் தூத்துக்குடியில் இருந்து 20 கடல் மைல் தொலைவில் வந்து கொண்டு இருந்தபோது, இந்திய கடலோர காவல் படையினர் அதை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். கப்ப லில் இருந்த அந்நிய நபரிடம் விசாரணை நடத்தியதில், அவர் மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமது அதீப் (37) என்பது தெரிய வந்தது. இதுகுறித்து, கடலோர காவல் படையினர் மத்திய, மாநில உளவுத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தீவிர விசாரணை

கப்பல் நேற்று மதியம் 12 மணிய ளவில் தூத்துக்குடி பழைய துறை முகம் பகுதிக்கு வந்து சேர்ந்தது. இதையடுத்து, ரா, ஐபி, கியூ, கடலோர காவல் படை, உள்ளூர் போலீஸார் என மத்திய, மாநில உளவுத் துறையைச் சேர்ந்த வர்கள் அந்த கப்பலில் ஏறி விசாரணையைத் தொடங்கினர்.

விசாரணையில், அவர் மாலத் தீவு முன்னாள் துணை அதிபர் அகமது அதீப் என்பது உறுதி செய்யப்பட்டது. அவர் எதற்காக தூத்துக்குடிக்கு சட்டவிரோதமாக தப்பி வந்தார்? கப்பலில் உள்ள மாலுமிகளுக்கு இதில் தொடர்பு உள்ளதா? அவர் தப்பி வர யாராவது உதவினரா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலத்தீவு முன்னாள் துணை அதிபர், கப்பலில் தப்பி வந்த விவ காரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 2 நாடுகள் சம்பந்தப்பட்ட பிரச்சினை என்பதால், அதிகாரிகள் கவனத்துடன் கையாண்டு வருகின் றனர்.

அகமது அதீப் யார்?

மாலத்தீவின் அதிபராக இருந்த யாமீன் அப்துல் கயூமை, 2015 செப். 8-ம் தேதி கொலை செய்ய முயற்சி நடந்தது. அவர் பயணம் செய்த சொகுசு படகில் குண்டுவெடித்தது. இதில், அதிபர் யாமீன் அப்துல் கயூம் காயமின்றி தப்பினார். அவரது மனைவி உள்ளிட்ட சிலர் காயமடைந்தனர்.

இக்கொலை முயற்சி தொடர் பாக, அப்போது துணை அதிபராக இருந்த அகமது அதீப் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவருக்கு கடந்த 2016-ம் ஆண்டில் 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதன்பின், மாலத்தீவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, இந்த வழக்கை அந்நாட்டு உயர் நீதிமன்றம் கடந்த மே மாதம் ரத்து செய்தது. மேலும், இது தொடர்பாக புதிதாக விசாரணை நடத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. அகமது அதீப் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், மாலத்தீவு அரசின் 10 நாள் அனுமதியுடன் அகமது அதீப் கண் சிகிச்சைக்காக கடந்த ஜூன் 14-ம் தேதி இந்தியா வந்துள்ளார். புனேவில் உள்ள மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்ற அவர், ஜூலை 7-ம் தேதிதான் மாலத்தீவுக்கு திரும்பியுள்ளார். இதற்கிடையில், அவர் சரக்கு கப்பல் மூலம் தூத்துக்குடிக்கு தப்பி வந்துள்ளார்.

அவர் இந்தியாவில் அரசியல் அடைக்கலம் கோருவதற்காக வந்தாரா அல்லது சட்டவிரோதமாக இங்கே குடியேற வந்தாரா என்பது தெரியவில்லை.

அகமது அதீப் மீது மாலத்தீவில் வழக்கு இருப்பதால், இங்கே விசா ரணை முடிந்ததும், அவர் மீண்டும் அந்நாட்டுக்கே இந்திய கடலோர காவல் படை மூலம் அனுப்பி வைக் கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் நேற்று மாலை வரை உறுதியான எந்த தகவலும் வெளி யிடப்படவில்லை. உளவுத்துறையி னர் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in