‘நீட் ’ விலக்கு பெற போராடுவதாக அதிமுக பொய்: வேலூர் பிரச்சாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
ஆம்பூர்
'நீட்' தேர்வில் இருந்து தமிழகத் துக்கு விலக்கு பெற போராடுவதாக அதிமுக பொய் கூறுகிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி குற்றம்சாட்டினார்.
வேலூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து நேற்று செங்கிலிகுப்பம், மோட்டுப்பாளையம், மதனாஞ்சேரி பகுதிகளில் அவர் பேசியதாவது:
நீட் தேர்வால் பெரம்பலூரைச் சேர்ந்த கீர்த்தனா என்ற மாணவி தற் கொலை செய்து கொண்டதாக தகவல் வந்துள்ளது. நீட் தேர்வு கருணாநிதி ஆட்சியிலேயே வந்தது. அப்போது, நீட் தேர்வே வேண் டாம் என்று மறுத்து உச்ச நீதிமன் றம் வரை சென்று தடுத்தோம். ஜெயலலிதா முதல்வரான பிறகு அவர் உயிரோடு இருந்தவரை நீட் தேர்வை உள்ளே நுழையாமல் பார்த்துக் கொண்டார்.
ஆனால், பழனிசாமி முதல்வ ரானதும் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டு மாணவிகள் தற்கொலை செய்துகொள்வது தொடர்கிறது. கீர்த்தனாவின் இறப்புக்கு தமிழக அரசு என்ன பதில் சொல்லப் போகிறது.
நீட் தேர்வு பிரச்சினை குறித்து 2 ஆண்டுகளுக்கு முன்பே சட்டப் பேரவையில் நிறைவேற்றிய தீர் மானத்தில் தமிழகத்துக்கு விலக்கு கோரி டெல்லிக்கு அனுப்பினோம். அந்த மசோதாவை 2 ஆண்டுக்கு முன்பே குடியரசுத் தலைவர் திருப்பி அனுப்பியுள்ளார்.
அந்த தீர்மானத்தை பற்றி வாய் திறக்கவில்லை. இதை சட்டப் பேரவையில் சொல்லி இருக்க வேண்டும். அதையும் செய்யாமல் நீட் தேர்வில் விலக்கு பெற போராடு வோம் என்றே கூறி வருகின்றனர்.
3 மாதங்களுக்கு முன்பு நடந்த மக்களவைத் தேர்தல் அறிக்கை யில் அதிமுக சார்பில் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற போராடு வோம் என்று பொய் கூறியுள்ளனர். இதே கேள்வியைத்தான் உயர் நீதி மன்ற நீதிபதியும் கேட்டுள்ளார்.
திமுக கூட்டணி கட்சி கொடி களை இங்கு பார்க்க முடிகிறது. அதிமுக பிரச்சாரத்தில் பாஜக கொடி இருக்கிறதா? பாஜகவை தமிழகம் ஏற்கவில்லை என அதிமுகவுக்கே தெரிகிறது என்றார்.
