Published : 02 Aug 2019 08:04 AM
Last Updated : 02 Aug 2019 08:04 AM

முத்தலாக் தடை சட்ட மசோதாவுக்கு எதிராகவே வாக்களித்தேன்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்பி. அப்துல் வஹாப் விளக்கம்

சென்னை

நாடாளுமன்ற மாநிலங்களவையில் முத்தலாக் தடை சட்ட மசோதாவுக்கு எதிராகவே தான் வாக்களித்ததாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் பி.வி.அப்துல் வஹாப் விளக்கம் அளித்துள்ளார்.

முத்தலாக் தடை சட்ட மசோதா மாநிலங்களவையில் கடந்த 30-ம் தேதி நிறைவேறியது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக 99 வாக் குகளும், எதிராக 84 வாக்குகளும் பதிவாகின. அதிமுக, ஐக்கிய ஜனதா தளம் போன்ற கட்சிகள் வெளிநடப்பு செய்தன. மசோதாவுக்கு எதிராக வாக்களித்த கட்சிகளைச் சேர்ந்த சில உறுப்பினர்கள் ஓட்டெடுப்பு நடைபெற்றபோது அவையில் இல்லை.

இது தொடர்பாக ‘இந்து தமிழ்' நாளிதழ் செய்தியாளரிடம் பேசிய முஸ்லிம் லீக் மாநிலங்களவை உறுப்பினரும், அக்கட்சியின் தேசிய பொருளாளருமான பி.வி.அப்துல் வஹாப், ‘‘மாநிலங்களவையில் முத் தலாக் தடை சட்ட மசோதா ஓட்டெடுப் புக்கு வந்தபோது அதை எதிர்த்து முஸ்லிம் லீக் கட்சியின் ஒரே எம்.பி. யான நான் வாக்களித்தேன்.

ஆனால், ‘இந்து தமிழ்' உட்பட சில பத்திரிகைகளில் மசோதா ஓட் டெடுப்புக்கு வந்தபோது நான் அவையில் இல்லை என செய்தி வெளியாகியுள்ளது. அது முற்றிலும் தவறானது. முத்தலாக் தடை சட்ட மசோதாவுக்கு எதிராக பதிவான 84 வாக்குகளில் எனது வாக்கும் ஒன்று’’ என்றார்.

இது தொடர்பாக இந்திய யூனி யன் முஸ்லிம் லீக் தமிழகப் பொதுச் செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான கே.ஏ.எம். முக மது அபூபக்கர் கூறும்போது, ‘‘முஸ் லிம்களின் மத உரிமைகளில் தலை யிடும் முத்தலாக் தடை சட்டத்துக்கு எதிராக முஸ்லிம் லீக் நாடாளுமன் றத்திலும், வெளியிலும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. முத்த லாக் சட்டம் தேவையற்றது என்பது தான் முஸ்லிம் லீக்கின் உறுதியான நிலைப்பாடு. முத்தலாக் தடை சட்ட மசோதா மாநிலங்களவையில் ஓட் டெடுப்புக்கு வந்தபோது முஸ்லிம் லீக்கின் ஒரே எம்பி.யான அப்துல் வஹாப் எதிர்த்து வாக்களித்தார். ஆனால், ஓட்டெடுப்பின்போது அவர் அவையில் இல்லை என சில பத்திரி கைகளில் செய்தி வெளியானது வருத்தம் அளிக்கிறது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x