Published : 02 Aug 2019 08:02 AM
Last Updated : 02 Aug 2019 08:02 AM

புதிய பாடத்திட்ட தவறுகளை களைய தனி குழு: பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை

சென்னை

புதிய பாடப் புத்தகங்களில் இடம் பெற்றுள்ள தவறுகளைக் கண்ட றிந்து சரிசெய்ய பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் பிரத்யேக குழு அமைக்கப்பட்டுள்ளது.

தமிழக பள்ளிக் கல்வியில் அனைத்து வகுப்புகளுக்கும் பாடத் திட்டம் மாற்றப்பட்டுள்ளது. இதற்கு பரவலாக வரவேற்பு கிடைத் துள்ளன, அதேநேரம் புதிய பாடப் புத்தகங்களில் பல்வேறு பிழைகள் உள்ளன. அவற்றை உடனே திருத் தம் செய்ய வேண்டுமென கல்வி யாளர்கள், ஆசிரியர்கள் வலியு றுத்தி வருகின்றனர்.

அந்தவகையில் புதிய பாடத் திட்டத்தில் இதுவரை 21 பிழைகளை மாநில கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் திருத்தம் செய் துள்ளது. மேலும், புதிய பாடத் திட் டத்தில் இருக்கும் குறைகளைக் களைவதற்காக பிரத்யேக குழுவை கல்வித் துறை அமைத்துள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘பாடப் புத்தகங்களில் உள்ள தவறுகளை சரிசெய்து மாணவர் கள் எளிதில் பாடங்களைப் படிக்க ஏதுவாக கடினமான பகுதிகளை நீக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மாநில கல்வியியல் ஆய்வு மற்றும் பயிற்சி நிறுவன இணை இயக்குநர்கள் தலைமை யில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதில் மாநிலம் முழுவதும் 32 ஆசிரியர் பயிற்சி நிறுவனங் களில் பணிபுரியும் விரிவுரையா ளர்கள் தங்கள் பகுதியிலுள்ள பள்ளிகளுக்கு நேரில் சென்று மாணவர்கள், ஆசிரியர்களி டம் புதிய பாடப் புத்தகங்கள் குறித்து கலந்துரையாட வேண்டும்.

அப்போது கூறப்படும் பாடப் புத்தகத்தில் உள்ள பிழைகள், கடினமான பகுதிகள், முரண்பட்ட கருத்துகள் என திருத்தப்பட வேண்டிய பகுதிகளை விரி வாகக் குறிப்பிட்டு அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த அறிக்கையை குழு வினர் ஆய்வு செய்து தேவை யான கருத்துகள் திருத்தம் செய் யப்படும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x