Published : 02 Aug 2019 07:58 AM
Last Updated : 02 Aug 2019 07:58 AM

வேலூர் மக்களவைத் தொகுதி பிரச்சாரம்; அதிமுகவின் புறக்கணிப்பால் அதிருப்தியில் பாஜக: தேர்தல் பணிகளில் இருந்து ஒதுங்கிய நிர்வாகிகள்

சென்னை

வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் பிரச்சாரத்துக்கு பாஜகவை அழைக்காததால் தேர்தல் பணி களில் இருந்து அக்கட்சியின் நிர்வாகிகள் ஒதுங்கியுள்ளனர்.

வேலூர் மக்களவைத் தொகுதி யில், வரும் 5-ம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. திமுக சார்பில் அக்கட்சியின் பொரு ளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த், அதிமுக கூட்டணி சார்பில் புதிய நீதிக் கட்சித் தலை வர் ஏ.சி.சண்முகம் உள்ளிட்ட 28 பேர் களத்தில் உள்ளனர்.

திமுக வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டா லின், இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். திமுக கூட்டணியில் இடம் பெற் றுள்ள காங்கிரஸ், மதிமுக, மார்க் சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடு தலைச் சிறுத்தைகள், முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களும், நிர் வாகிகளும் பிரச்சாரம் செய்து வரு கின்றனர்.

ஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவாக தேர்தல் பணியாற்ற அதிமுக தரப் பில் அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள், மாவட்டச் செயலா ளர்கள், முன்னாள் அமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள் ளது. முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகி யோர் பிரச்சாரம் செய்தனர். அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமக, தேமுதிக, தமாகா, புதிய தமிழகம் தலைவர்களும் பிரச் சாரம் செய்கின்றனர். ஆனால், அதிமுக கூட்டணியில் முக்கிய மான கட்சியாக உள்ள பாஜக சார்பில் யாரும் பிரச்சாரம் செய்ய வில்லை. மாவட்ட அளவிலான நிர் வாகிகள் மட்டும் பெயரளவுக்கு தேர் தல் பணியாற்றி வருகின்றனர்.

இது தொடர்பாக பாஜகவின் முக்கியமான தலைவர் ஒருவரிடம் கேட்டபோது, ‘‘வேலூர் தொகுதி யில் முஸ்லிம் வாக்குகள் கணிச மான அளவில் இருப்பதால் தேர் தல் பிரச்சாரத்துக்கு பாஜகவை அழைக்க அதிமுக தயக்கம் காட்டு கிறது. பாஜக தலைவர்கள் பிரச் சாரம் செய்வதை வேட்பாளரான ஏ.சி.சண்முகமும் விரும்பவில்லை.

இதனால் வேலூர் தேர்தல் பணிகளில் ஈடுபடாமல் உறுப்பினர் சேர்க்கை பணிகளில் கவனம் செலுத்தி வருகிறோம். கடந்த 2014 தேர்தலில் பாஜக, தேமுதிக, பாமக, மதிமுக கூட்டணியில் பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிட்ட ஏ.சி.சண்முகம், அதிமுக, திமுக தயவின்றி 3 லட்சத்து 24 ஆயிரத்து 326 வாக்குகள் பெற்றார். 59,393 வாக்குகள் வித்தியாசத்தில்தான் அதிமுக வென்றது. திமுக கூட்டணி கட்சியான முஸ்லிம் லீக் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

வேலூர் தொகுதியில் பாஜகவுக் கென தனி வாக்கு வங்கி உள்ளது. அதை மறந்துவிட்டு முஸ்லிம் வாக் குகளுக்காக பாஜகவை புறக்கணிக் கின்றனர். எனவே, நாங்களும் ஒதுங் கிவிட்டோம். கூட்டணி தர்மத்துக் காக உள்ளூர் நிர்வாகிகள் மட்டும் பணியாற்றுகின்றனர்’’ என்றார்.

இந்நிலையில், வேலூர் தொகுதி யில் அதிமுகவின் புறக்கணிப்பு தமிழக பாஜகவினரை அதிருப்தி அடைய வைத்துள்ளது. இது தொடர் பாக பிரதமர் மோடி, தேசியத் தலை வர் அமித்ஷா, தேசிய செயல் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரி டம் தமிழக பாஜக தலைவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக தமிழக பாஜக மாநில நிர்வாகி ஒருவரிடம் பேசியபோது, ‘‘பாஜக ஆதரவு இருப்பதால்தான் அதிமுக ஆட்சி நீடிக்கிறது. ஆனாலும் அமைச்சர் களும், அதிமுக நிர்வாகிகளும் பாஜகவை ஏளனமாக பார்க்கின் றனர். இனியும் இந்த ஆட்சி நீடிக்க எந்த வகையிலும் உதவ வேண்டாம் என மேலிடத்திடம் உறுதியுடன் கூறியுள்ளோம்’’ என்றார்.

வேலூர் தேர்தல் பிரச்சாரம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனிடம் கேட்ட போது, ‘‘நாடு முழுவதும் பாஜக உறுப்பினர் சேர்க்கை நடந்துவரு கிறது. தமிழகத்தில் உறுப்பினர் சேர்க்கையில் தீவிரமாக இருப்ப தால் வேலூரில் பிரச்சாரம் செய்ய வில்லை. ஆனாலும் இன்னும் நாட்கள் இருக்கிறது. வேலூர் தொகு திக்குட்பட்ட பாஜக நிர்வாகிகள் அதிமுகவின் வெற்றிக்காக உழைத்து வருகின்றனர்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x