

காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் அத்திவரதர் தரிசன பாதுகாப்பு பணியில் சுமார் 8,000 போலீஸார் ஈடுபட்டுள்ளனர். பல் வேறு மார்க்கமாக காஞ்சிக்கு வந் திறங்கும் பக்தர்களை கோயி லுக்கு வழியனுப்பி வைப்பது, கோயிலுக்குள் வரிசையை ஒழுங்குபடுத்துவது, தள்ளு முள்ளு இல்லாமல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வது ஆகிய வற்றில் போலீஸாரின் பணி பாராட் டுக்குரியது. வயதானவர்கள், பெண்களிடம் கோயில் ஊழியர் களும், பெண் போலீஸாரும் கனிவாக நடப்பதாக பக்தர்கள் நெகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.
அதேநேரம், வழிதெரியாமல் வரும் பக்தர்களை அலைக்கழிப் பது, விஐபி வழியில் வருபவர் களிடம் மரியாதைக் குறைவாக நடப்பது, காவல் துறையினருக்கு முன்னுரிமை தந்து, அதிக நபர் களை அனுமதிப்பது போன்ற செயல்களில் சில போலீஸார் ஈடுபடுவது பக்தர்களை வேதனை யடையச் செய்கிறது.
விஐபி வாகனங்களின் பாஸை பறித்துக் கொள்ளும் போலீஸார், அதைமுறைகேடாக பயன்படுத்து வதாகவும் புகார் கூறப்படுகிறது. இதுபோல ஒருசிலர் நடந்துகொள் வது, அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்படும் மற்ற போலீஸார் மீதும் அவப்பெயரை ஏற்படுத்தும் என்கின்றனர் பக்தர்கள்.