

சென்னை
நீட் தேர்வு சட்ட மசோதாக்களை குடியரசுத் தலைவர் நிராகரித்தது தொடர்பான தகவலை யாருக்கும் தெரிவிக்காமல் மூடி மறைத்தது ஏன் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன் றம் கேள்வி எழுப்பியுள்ளது.
மருத்துவம் மற்றும் மருத்துவ மேற்படிப்புகளுக்கு தமிழக மாண வர்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளித்து தமிழக அரசு கடந்த 2017-ம் ஆண்டு 2 சட்ட மசோதாக்களை நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக் காக அனுப்பி வைத்தது.
அந்த 2 மசோதாக்களுக்கும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலை விரைவாகப் பெற நடவடிக்கை எடுக்க, மத்திய அரசுக்கு உத்தர விடக் கோரி, கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, தமிழ்நாடு மாணவர் கள் பெற்றோர் நலச் சங்கம் உள்ளிட்ட 4 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2017-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தனர்.
நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய உள்துறைச் செயலர் ராஜீவ் கவுபா தாக்கல் செய்த பதில் மனுவில், ‘‘நீட் தேர்வு தொடர்பாக தமிழக அரசு அனுப்பிய 2 மசோதாக்களை குடியரசுத் தலைவர் நிராகரித்து உத்தரவிட்டார். அதுகுறித்து 2017 செப்.22-ம் தேதி தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. அதன்பிறகு இந்த மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங் களை கேட்டு தமிழக அரசு கடந்த 2017 அக்.25-ம் தேதி கடிதம் அனுப் பியது’’ என்று தெரிவித்திருந்தார்.
இதையடுத்து நடந்த வாதம் வருமாறு:
மனுதாரர் தரப்பு மூத்த வழக் கறிஞர் விடுதலை: இந்த மசோதாக் களை குடியரசுத் தலைவர் எவ்வித காரணமும் கூறாமல் நிராகரித்துள் ளார். அதற்கான காரணங்களை தெரிவிக்க வேண்டிய கடமை உள்ளது.
நீதிபதிகள்: மசோதா நிராகரிக் கப்பட்டதற்கான காரணங்களை மத்திய அரசிடம் மாநில அரசு கேட்டுள்ள நிலையில், பொதுநல வழக்கு மூலம் குடியரசுத் தலைவரி டம் அதற்கான காரணங்களை உயர் நீதிமன்றம் கேட்க முடியுமா? அரசியல் சாசனத்தின்படி இரு மாநிலங்கள் இடையிலான மற் றும் மத்திய - மாநில அரசுகள் இடை யிலான பிரச்சினை தொடர்பாக உச்ச நீதிமன்றம் மட்டுமே விசா ரிக்க முடியும்.
வழக்கறிஞர் விடுதலை: இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் கைகோத்து செயல்படுகின்றன. மத்திய அரசு நிராகரித்த 2 ஆண்டுகளில், அதை மீண்டும் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது தொடர்பாக பதில் அளிக்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கு உள்ளது.
நீதிபதிகள்: மத்திய அரசு அனுப்பிய கடிதத்தை பெற்றுக் கொண்டது தொடர்பாக தமிழக அரசு இதுவரை எந்த பதிலையும் நீதிமன்றத்தில் தெரிவிக்காதது ஏன்? ஒரு சட்ட மசோதா ஒரு முறை நிறுத்தி வைக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டால் மீண்டும் அதை சட்டப்பேரவையில் நிறை வேற்றி மறுபடியும் அனுப்ப எந்த தடையும் இல்லை. ஒருவேளை அரசு விரும்பினால் தற்போதுகூட புதிய மசோதாவை பேரவையில் நிறைவேற்றி மீண்டும் அனுப்பலாம்.
குடியரசுத் தலைவர் ஒரு மசோதாவை ஏற்பதையோ, திருப்பி அனுப்புவதையோ அல்லது நிறுத்தி வைப்பதையோ யாரும் கேள்வி கேட்க முடியாது அதேபோல மத்திய அரசு அனுப்பிய இந்த கடிதம் பற்றி தனக்கு தெரியாது என யாரும் கூற முடியாது. இவ்வாறு நீதிபதிகள் கூறினர். இதுதொடர்பாக அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க அவ காசம் தேவை என அரசு தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை வரும் 13-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.