பிளாஸ்டிக் தடையை முறையாக கடைபிடிக்காத மதுக்கூடங்கள்: நடவடிக்கை எடுக்க முடியாமல் அதிகாரிகள் திணறல்

பிளாஸ்டிக் தடையை முறையாக கடைபிடிக்காத மதுக்கூடங்கள்: நடவடிக்கை எடுக்க முடியாமல் அதிகாரிகள் திணறல்
Updated on
2 min read

ச.கார்த்திகேயன்

சென்னை

உள்ளாட்சி அமைப்புகள் செயல் படுத்தி வரும் திடக்கழிவு மேலாண்மை மற்றும் பிளாஸ்டிக் தடை ஆகியவற்றை மதுக்கூடங்கள் முறையாக கடைபிடிப்பதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அந்த மதுக்கூடங்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியா மல் கள அதிகாரிகள் திணறி வரு கின்றனர்.

தமிழகத்தில் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறு வோருக்கு அபராதம் விதிக்க வகை செய்யும் சட்டத்தையும் உள்ளாட்சித் துறை இயற்றியுள் ளது. மேலும் நாடு முழுவதும் திடக்கழிவு மேலாண்மை விதிகளை முறையாக கடைபிடிப்பதைக் கண்காணிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் சார்பில் முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதிகள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், பிளாஸ்டிக் தடை மற்றும் திடக்கழிவு மேலாண்மை விதிகளை மதுக்கூடங்கள் முறையாக பின்பற்றுவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகத்தில் உள்ள 3,200 மதுக்கூடங்களில், பலவற்றில் பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித குவ ளைகள் தங்குதடையின்றி விற்கப் படுவதாகவும், மதுக்கூடங்களில் சுகாதாரமற்ற சூழல் நிலவுவதால், பலர் மதுக்கூடங்களுக்கு வெளியே மது அருந்துவதாகவும் புகார் எழுந்துள்ளது.

அவர்கள் மது பாட்டில்கள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகிதக் குவளைகள் ஆகியவற்றை சாலை யோரம் வீசிவிடுவதால், அதை வகை பிரித்து அகற்றுவதில் உள் ளாட்சி அமைப்புகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த மதுக்கூடங்களால் உள்ளாட்சிகளுக்கு வருவாய் கிடைப்பதில்லை ஆனால், இந்த மதுக்கூடங்களுக்கு வெளியே கிடக்கும் குப்பைகளை அகற்றும் பணியில் உள்ளாட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.

மதுக்கூடங்களில் சுகாதாரமான சூழலை உணவு பாதுகாப்புத் துறை உறுதி செய்தால், மது அருந்துவோர் மதுக்கூடங்களைவிட்டு வெளியில் வரவேண்டிய அவசியம் இல்லை. மேலும் அங்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தடுக் கும் கடமை, உணவு பாதுகாப்புத் துறைக்கும் உள்ளது. ஆனால் அங்கு எந்த சோதனையும் நடத்து வதில்லை.

சென்னை மாநகராட்சி நிர் வாகம், பிளாஸ்டிக் தடையை மீறுவோர் மீது அபராதம் விதிப்ப தற்கான சட்டத்தை அமல்படுத்து வதற்கு முன்பு ஒருமுறை மட்டும் 305 மதுக்கூடங்களில் திடீர் சோதனை நடத்தி 904 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறி முதல் செய்தது. தற்போது 3 முறை தவறு செய்தால், மதுக்கூடத்தை மூடி சீல் வைக்கும் அதிகாரம் கிடைத்துள்ள நிலையில் இதுவரை மதுக்கூடங்களில் சோதனை நடத்தவில்லை.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி மற்றும் உணவு பாதுகாப்புத் துறை கள அதிகாரிகள் கூறும்போது, "மதுக்கூடங்களை அரசியல் செல்வாக்கு மிக்கவர்கள் நடத்துவதால், துறை தலைமை உத்தரவிட்டு, உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கினால் மட்டுமே சோதனை நடத்த முடியும்" என் றனர். இதனால் உள்ளாட்சி அமைப்புகள் செயல்படுத்தி வரும் திடக்கழிவு மேலாண்மை, பிளாஸ்டிக் தடை ஆகியவற்றுக்கு மதுக்கூடங்கள் பெரும் சவாலாக இருந்து வருகின்றன.

இதைத் தடுக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரி களிடம் கேட்டபோது, "டாஸ்மாக் உள்ளிட்டவற்றில் சோதனையிட்டு நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் தடையை அமல்படுத்துவதற்கான அறிவுரைகளும் உள்ளாட்சி களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட் டுள்ளன" என்றனர்.

சென்னை மாநகராட்சி அதி காரிகளிடம் இதுகுறித்து கேட்ட போது, "மதுக்கூடங்களில் விரை வில் சோதனை நடத்தப்படும்" என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in