Published : 01 Aug 2019 07:50 AM
Last Updated : 01 Aug 2019 07:50 AM

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்தும் கல்வி கட்டணம் செலுத்த முடியாத மாணவிக்கு தி.மலை ஆட்சியர் உதவி

ஆரணி மாணவி தீபாவுக்கு மருத்துவம் படிப்பதற்கான முதற்கட்ட தொகையை வழங்கிய திருவண்ணாமலை ஆட்சியர் கந்தசாமி.

ஆரணி 

ஆரணி இரும்பேடு பகுதியைச் சேர்ந்த விவசாய கூலி தொழிலாளி யின் மகள் மருத்துவம் படிப்பதற் கான கல்வி உதவித் தொகையை திருவண்ணாமலை ஆட்சியர் கந்த சாமி நேரில் வழங்கிப் பாராட்டினார்.

மருத்துவப் படிப்புக்கான ‘நீட்' தேர்வில் 564 மதிப்பெண் பெற்று சென்னை கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் படிக்க ஆரணி இரும் பேடு பகுதியைச் சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளியின் மகள் தீபாவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஆனால், கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கான கல்விக் கட்டணம் செலுத்தவும் விடுதியில் தங்கிப் படிப்பதற்கான வசதியும் இல்லாமல் திணறிவந்தார். தனது மருத்துவக் கனவு நிறைவேற உதவி செய்யு மாறு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடம் சில நாட்களுக்கு முன்பு தீபா மனு அளித்திருந்தார். அதன்பேரில், தீபாவுக்கு உதவி செய்ய ஆட்சியர் கந்தசாமி முன் வந்துள்ளார்.

முதற்கட்டமாக தீபாவுக்கு ரூ.50 ஆயிரம் ரொக்கத்தை கல்வி உதவித் தொகையாக ஆட்சியர் கந்தசாமி நேற்று நேரில் சென்று வழங்கினார்.

தொழிலாளி மகள்

தீபாவின் தந்தை நாகராஜன் விவசாயத் தொழிலாளி. தாய் தெய்வானை இரும்பேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சத்துணவு சமையலராக உள்ளார். வீட்டின் மூத்த மகளான தீபா, பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் 495/500 மதிப்பெண் பெற்று சிறப்பிடம் பிடித்தார்.

2017-18 கல்வியாண்டில் தமிழ் வழியில் பிளஸ் 2 அரசுப் பொதுத் தேர்வை எதிர்கொண்ட தீபா, 1167/1200 மதிப்பெண் பெற்று பள்ளியில் சிறப்பிடம் பிடித் தார்.

தீபாவின் படிப்புத் திறமையைப் பார்த்த ஆசிரியர்கள் சிலர், அவரை மருத்துவம் படிக்க நீட் தேர்வு பயிற்சி வகுப்பில் சேர்ந்து ஓராண்டு படித்தால் நிச்சயம் வெற்றி பெற முடியும் என்று கூறியுள்ளனர்.

அந்தப் பள்ளியிலேயே தனியார் நிறுவனம் அளித்த சலுகையுடன் நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்பில் சேர்ந்து ஓராண்டு படித்து, அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற் றார்.

ஆட்சியர் உதவி

தீபாவின் நிலையை அறிந்த ஆட்சியர் கந்தசாமி, தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் முதற் கட்டமாக ரூ.50 ஆயிரத்துக்கான தொகையை தீபாவின் தாய் சமைய லராக வேலை செய்யும் பள்ளி வளாகத்துக்கே சென்று வழங்கி பாராட்டினார்.

பள்ளி நாட்களில் மாணவி தீபா பெற்ற பரிசுகளை எல்லாம் ஆட்சியருக்கு காண்பித்து பாராட்டு பெற்றார். மேலும், மருத்துவம் படிப்பதற்கான செலவை முழு மையாக ஏற்க நடவடிக்கை எடுக் கப்படும் என்றும் ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x