Published : 01 Aug 2019 07:41 AM
Last Updated : 01 Aug 2019 07:41 AM

150 இடங்களுடன் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட கரூர் அரசு மருத்துவ கல்லூரி திறப்பு: முதலாமாண்டு வகுப்புகளை தொடங்கி வைத்தார் முதல்வர் 

கரூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை காணொலிக்காட்சி மூலமாக திறந்து வைத்து, முதலாம் ஆண்டு மருத்துவப் பட்டப்படிப்பு வகுப்பை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். மேலும் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களையும் திறந்து வைத்தார்.

சென்னை

கரூர் மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அரசு மருத் துவக் கல்லூரிக்கு ரூ.115 கோடியே 71 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை திறந்து வைத்த முதல்வர் பழனிசாமி, முதலா மாண்டு மருத்துவ பட்டப்படிப்பு வகுப்பையும் தொடங்கி வைத் தார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கடந்த 2014-ம் ஆண்டு சட்டப் பேரவையில் 110-விதியின் கீழ் அப்போதைய முதல்வர் ஜெய லலிதா, கரூர் மாவட்டத்தில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என அறிவித்திருந் தார்.

அதன்படி, கரூர் மாவட்டத்தில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி தொடங்க கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி 19-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. கூர் - சனபி ரெட்டி கிராமத்தில் ரூ.269 கோடியே 58 லட்சம் மதிப்பில் கல்லூரி கட்டுவதற்கான நிதி ஒதுக்கி, 2018-ம் ஆண்டு ஜூன் 27-ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

திறந்து வைத்தார்

அதன் அடிப்படையில், புதிதாக தோற்றுவிக்கப்பட்ட கரூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு ரூ.115 கோடியே 71 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்வர் பழனிசாமி நேற்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். மேலும், முதலாண்டு மருத்துவ பட்டப்படிப்பு மாணவர் களுக்கான வகுப்பையும் தொடங்கி வைத்தார்.

கரூர் அரசு மருத்துவக் கல்லூ ரிக்கு இந்திய மருத்துவக்குழும விதிகள்படி, முதலாண்டு மாணவர் சேர்க்கைக்கு தேவையான இயல்கூடம், நிர்வாக கட்டிடம், மாணவ, மாணவியர் தங்கும் விடுதிகள், முதல்வர் குடியிருப்பு, மருத்துவ ஆசிரியர் குடியிருப்பு, செவிலியர் தங்கும் விடுதி, உறைவிட மற்றும் உதவி உறைவிட மருத்துவ அலுவலர், மருத்துவ கண்காணிப்பாளர் மற்றும் செவிலி யர் கண்காணிப்பாளர் குடியிருப்பு கள் உள்ளிட்ட புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.

மேலும், தேவையான உப கரணங்கள் வழங்க ரூ.25 கோடியே 64 லட்சம் ஒதுக்கப்பட்டு, மருத் துவப் பணிகள் கழகத்தால் கொள் முதல் செய்யப்பட்டு வருகிறது. பேராசிரியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் மற்றும் இதர பணியாளர்கள் நியமிக்க, 985 நிரந்தர பணியிடங்கள், அவுட் சோர்சிங் முறையில் 57 பணி இடங்களும் தோற்றுவிக்கப்பட்டு உள்ளன.

இந்தக் கல்லூரியில் நடப்பாண் டில் 150 மருத்துவ பட்டப்படிப்பு மாணவர்கள் சேர்க்கைக்கு இந்திய மருத்துவக் குழும அனுமதி கிடைத்து, மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது.

இந்த 150 இடங்கள் உட்பட 1,350 மருத்துவப் படிப்பு இடங் கள் தமிழகத்தில் ஏற்படுத்தப்பட் டுள்ளன. தமிழகத்தில் உள்ள 22 மருத்துவக் கல்லூரிகளுடன் கரூர் கல்லூரி 23-வது கல்லூரியாக செயல்படும்.

புதிய கட்டிடங்கள்

மேலும், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் கீழ் கோவை, தூத்துக்குடி, நாமக்கல், நீலகிரி, திருவள்ளூர், தஞ்சை, திருச்சி, விருதுநகர் மாவட்டங்களில் ரூ.9 கோடியே 60 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்களையும் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில், அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தலைமைச் செயலர் கே.சண்முகம், துறை செயலர் பீலா ராஜேஷ், மருத் துவப்பணிகள் கழக மேலாண் இயக்குநர் உமாநாத், சுகாதார திட்ட இயக்குநர் கே.செந்தில்ராஜ், மருத்துவக்கல்வி இயக்குநர் எட்வின் ஜோ உள்ளிட்டோர் பங் கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x