ஈரான் அரசு சிறை பிடித்துள்ள இங்கிலாந்து கப்பலில் சென்னை இளைஞர் சிக்கி தவிப்பு: மகனை மீட்டுக் கொடுக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு தந்தை கோரிக்கை

ஆதித்யா வாசுதேவன்
ஆதித்யா வாசுதேவன்
Updated on
2 min read

சென்னை

ஈரான் அரசால் சிறைப்பிடிக்கப் பட்டுள்ள இங்கிலாந்து கப்பலில் சிக்கியுள்ள சென்னை மேற்கு மாம் பலத்தைச் சேர்ந்த ஆதித்யாவை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தந்தை கண்ணீர் மல்க தெரிவித்தார்.

ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிப்பதாக அமெரிக்கா, இங்கி லாந்து உள்ளிட்ட நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. இதன் காரண மாக ஈரான் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இத னால், ஆத்திரமடைந்த ஈரான் நாட்டு வீரர்கள், வளைகுடா கடல் பகுதியில் பறந்த அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தினர். இதற்கு பதிலடியாக ஈரானின் ஆளில்லா உளவு விமானத்தை அமெரிக்க ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தினர்.

வளைகுடா பகுதியில் பதற்றம் நிலவி வரும் நிலையில், கடந்த 4-ம் தேதி சிரியாவுக்கு கச்சா எண் ணெய் ஏற்றிச் சென்ற ஈரான் நாட்டு கப்பலை கிப்ரால்டார் என்ற இடத் தில் இங்கிலாந்து அரசு சிறைப் பிடித்தது.

இந்தக் கப்பலில் உள்ள இந்தியாவைச் சேர்ந்த 21 பேரை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளது. கப்பலில் சிக்கியுள்ள நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சேர்ந்த பொறியாளர் நவீன்குமாரை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு அவரது குடும்பத்தினர் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

சென்னை இளைஞர்

இதற்கிடையே, கடந்த 19-ம் தேதி இங்கிலாந்து நாட்டு கொடியுடன் சவுதிக்கு ஹார்முஸ் ஜலசந்தி பகுதியைக் கடந்து சென்று கொண்டிருந்த ஸ்வீடன் நாட்டின் ‘ஸ்டெனா இம்பெரோ' என்ற எண்ணெய்க் கப்பலை ஈரான் அரசு சிறைப்பிடித்தது. இந்தக் கப்பலில் உள்ள 23 பேரில் 18 பேர் தமிழகம், புதுச்சேரி, கேரளா, மகாராஷ்டிரா, பிஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இதர ஊழியர்கள் ரஷ்யா, பிலிப்பைன்ஸ், லாட்வியாவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

கப்பலில் சிக்கியுள்ள தமிழகத்தைச் சேர்ந்த ஆதித்யா வாசுதேவன் (27) சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்தவர் என்பது தற்போது தெரியவந்துள்ளது. மகனை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு அவரது பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர். ஆதித்யாவின் தந்தை வாசுதேவன் ஏர் இந்தியாவிலும், தாய் கண்ணம்மா மத்திய அரசிலும் அதிகாரியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர்கள்.

மகனுக்கு திருமணம்

இதுதொடர்பாக ஆதித்யாவின் தந்தை வாசுதேவன் கூறியதாவது:

எனது மகன் ஆதித்யா பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னைதான். புனேவில் பட்டப்படிப்பை முடித்த ஆதித்யா வேலைக்குச் சேர்ந்து 6 மாதம்தான் ஆகிறது. கப்பலில் 3-ம் நிலை அதிகாரியாக பணியாற்றி வருகிறார். மகனுக்கு திருமணம் செய்யத் திட்டமிட்டிருந்தோம். கப்பலில் எனது மகனுடன், புதுச்சேரியைச் சேர்ந்த சிலம்பரசன் என்பவரும் சிக்கியுள்ளார். கப்பலில் சிக்கியுள்ள கேரளாவைச் சேர்ந்தவர்களை மீட்க, அம்மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

தந்தை கண்ணீர்

எனது மகனை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவுத் துறை மற்றும் பிரதமர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளோம். தினமும் ஒரு முறை மகனை செல்போனில் பேச அனுமதிக்கின்றனர். தன்னை நல்லபடியாக நடத்துவதாகவும், நேரத்துக்கு உணவு கொடுப்பதாகவும், பயப்படாமல் இருக்குமாறு மகன் என்னிடம் தெரிவித்தார். தினமும் மகனிடம் இருந்து வரும் அழைப்புக்காக காத்திருக்கிறோம். எனது மகனை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in