

சென்னை
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
முத்தலாக் தடை சட்டம் மாநிலங் களவையில் நிறைவேற்றப்பட்டுள் ளது. முஸ்லிம் லீக்கை பொறுத்த வரை இந்நாள் ஒரு கருப்பு நாள். ஜூலை 26-ம் தேதியுடன் முடி வடைய இருந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரை நீட்டிப்பு செய்தது ஏன் என்பது இப்போது வெளிச்சத் துக்கு வந்துள்ளது.
முத்தலாக் தடை சட்டம் போன்ற பலரும் எதிர்க் கும் சட்டங்களை நிறைவேற்று வதற்காக நாடாளுமன்ற கூட்டத் தொடரை பாஜக அரசு நீட்டித் துள்ளது. எதிர்பாராத நீட்டிப்பு காரணமாக பல உறுப்பினர்களால் அவைக்கு வர முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
இந்தச் சூழலை பயன்படுத்தி முத்தலாக் தடை சட்டத்தை பாஜக அரசு நிறைவேற்றியுள்ளது. சிவில் சட்டத்தை கிரிமினல் சட்டமாக்குவது ஜனநாயக மரபல்ல. சிறுபான்மையினரின் மத உரிமைகளில் தலையிடுவது அவர்களுக்கு அரசியல் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளில் தலையிடுவதாகும்.
முத்தலாக் தடை சட்டம் மூலம் பொது சிவில் சட்டம் கொண்டு வருவதற்கான வாயில்களை திறக்க மத்திய அரசு முயற்சிக்கிறது.
இவ்வாறு கே.எம்.காதர் மொகிதீன் கூறியுள்ளார்.