Published : 01 Aug 2019 07:26 AM
Last Updated : 01 Aug 2019 07:26 AM

இன்றைய அரசியல் சூழலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைவது அவசியம்: இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி.ராஜா வலியுறுத்தல் 

சென்னை

இன்றைய அரசியல் சூழலில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டியது அவசியம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசியப் பொதுச்செயலாளர் டி.ராஜா வலியுறுத்தியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் தேசிய பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பிறகு முதல் முறை யாக சென்னை வந்த அவர், நேற்று செய்தியாளர்களிடம் பேசியதாவது:

சோதனைகளும் சவால்களும் நிறைந்த காலகட்டத்தில் தேசிய பொதுச்செயலாளர் என்ற மிகப்பெரிய பொறுப்பை கட்சி எனக்கு வழங்கியுள்ளது. வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் அமோக வெற்றி பெறுவார். சுதந்திரமான, நேர்மையான தேர்தல் நடை பெற தேர்தல் ஆணையம் பாரபட்ச மின்றி நடுநிலையோடு செயல்பட வேண்டும்.

ஆனால், தேர்தல் ஆணையம் நடுநிலை தவறி ஆட்சி யாளர்களுக்கு ஆதரவாகச் செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது ஜன நாயகத்துக்கு நல்லதல்ல. எனவே, தேர்தல் ஆணையர்களை மத்திய அரசே நேரடியாக நியமனம் செய்யும் முறையை மாற்றி, தேர்வுக் குழு மூலம் நியமிக்கும் முறையை கொண்டுவர வேண்டும்.

மத்திய பாஜக அரசு, கூட்டுறவு கூட்டாட்சி என்று சொல்லிக் கொண்டே, மாநிலங்களின் உரிமை களைப் பறிக்கிறது. பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவை ஒற்றைமயமாக்க இந்துத்துவ சித்தாந்த்தை அனைத்துத் துறை களிலும் திணிக்கிறது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் கொள்கைகள் அடிப் படையிலேயே மத்திய பாஜக அரசு செயல்படுகிறது. போராடி பெற்ற ஆர்டிஐ சட்டத்தை நீர்த்துப் போகச் செய்ததன் மூலம் அரசு நிர் வாகத்தில் வெளிப்படைத்தன்மை இல்லாத நிலை உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. அரசை எதிர்ப்பவர்கள், எதிர் கருத் துக்களை முன்வைப்பவர்களை நகர்ப்புற நக்சல்கள், தேசவிரோதி கள் என முத்திரை குத்தும் போக்கு அதிகரித்துள்ளது.

மதமோதலை உருவாக்கி நாட்டை ஒருவித இறுக்கமான நிலையில் வைத்திருக்க வேண்டும். அதன்மூலம் ஆட்சி அதிகாரத்தில் நீடித்து நிலைத்திருக்க வேண்டும் என்பதே பாஜகவின் திட்டம். இதனை முறியடிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

இன்றைய மோசமான கால கட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒன்றிணைவது மிகவும் அவசிய மானது. இதனை இந்திய கம்யூனிஸ்ட் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளராக இந்திரஜித் குப்தா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளராக ஹர்கிஷன்சிங் சுர்ஜித் ஆகியோர் இருந்தபோது இணைப்புக்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு இரு வரும் கையெழுத்திட்ட சுற்றிக்கை வெளியிடப்பட்டது.

ஆனால், அந்த முயற்சிகள் கைவிடப்பட்டன. இப் போது மீண்டும் இணைப்புக்கான கட்டாயச் சூழல் உருவாகியுள்ளது. அதற்கான முயற்சிகளை தொடங்கி யுள்ளோம். இவ்வாறு டி.ராஜா கூறினார்.

பேட்டியின்போது இந்திய கம்யூ னிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், தேசியக் குழு உறுப்பினர் சி.மகேந்திரன், மாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டி யன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x