Published : 01 Aug 2019 07:24 AM
Last Updated : 01 Aug 2019 07:24 AM

காவல் துறையில் இருந்து டிஜிபி ஜாங்கிட் ஓய்வு 

சென்னை

காவல் துறையில் இருந்து ஓய்வு பெற்ற டிஜிபி ஜாங்கிட், தன்னு டன் பணியாற்றிய அனைத்து போலீஸாருக்கும் நன்றி தெரி வித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் பார்மர் பகுதியைச் சேர்ந்தவர் எஸ்.ஆர்.ஜாங்கிட். 1985-ம் ஆண்டு ஐபிஎஸ் ஆக தேர்வாகி, திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் உதவி எஸ்.பி.யாக பணியை தொடங்கினார். பின்னர் நீலகிரி, கடலூர், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் எஸ்.பி.யாக பணிபுரிந்துள்ளார்.

தமிழகத்தில் தொடர் கொள் ளைகளில் ஈடுபட்டுவந்த பவா ரியா கொள்ளையர்களை ஜாங் கிட் தலைமையிலான தனிப்படை போலீஸார் கைது செய்தனர். படிப் படியாக உயர்ந்து டிஜிபி ஆன ஜாங்கிட், கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு அதி காரியாக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். சிறந்த சேவைக் காக 2 முறை குடியரசுத் தலை வர் பதக்கமும், ஒருமுறை பிரதமர் பதக்கமும், 2 முறை தமிழக முதல் வரின் பதக்கமும் பெற்றுள்ளார்.

இந்நிலையில், அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையில், ‘இந்திய காவல் பணியில் 34 ஆண்டுகள் பணிபுரிந்து விடை பெறுகிறேன். இந்த கால கட்டத்தில் என்னுடன் பணியாற்றிய காவலர்கள் மற்றும் அனைத்து உயர் அதிகாரிகளுக் கும் எனது இதயபூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள் கிறேன். குறிப்பாக திருநெல் வேலி, தூத்துக்குடியில் ஏற்பட்ட ஜாதி மோதலை கட்டுப்படுத்தி யது, பவாரியா கும்பலை பிடித் தது, வெள்ளை ரவி, பங்க் குமார் போன்ற பிரபல ரவுடிகளின் மீதான நடவடிக்கை போன்ற மிக முக்கியமான காலகட்டங்களில் என்னுடன் அனைவரும் இணைந்து பணியாற்றியதை என் றும் மறவேன். என்னுடைய சிறப் பான பணிக்கு ஒத்துழைத்த நீங் கள் அனைவரும்தான் காரணம்’ என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x