Published : 01 Aug 2019 07:18 AM
Last Updated : 01 Aug 2019 07:18 AM

தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு எதிர்ப்பு; நாடு முழுவதும் மருத்துவர்கள் 24 மணி நேர வேலைநிறுத்தம்: போராட்டத்தால் நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் அவதி 

தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பதை திரும்ப பெற மத்திய அரசை வலியுறுத்தி இந்திய மருத்துவர் சங்கம் சார்பில் சென்னை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற மருத்துவர்கள். படம்: பு.க.பிரவீன்

சென்னை

தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் 24 மணி நேர வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணி யாற்றினர்.

இந்திய மருத்துவக் கவுன்சி லுக்கு (எம்சிஐ) பதிலாக தேசிய மருத்துவ ஆணையத்தை (என்எம்சி) மத்திய அரசு கொண்டு வர உள்ளது. இது மருத்துவத் துறைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனக்கூறி நாடுமுழுவ தும் அரசியல் கட்சியினர், மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தேசிய மருத்துவ ஆணையத்தின் மசோதா பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் மாநிலங்களவையில் மசோதா நிறைவேறியது.

இந்த ஆணைய மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் உள்ளிட்ட நாடு முழுவதும் மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் தர்ணா, ஆர்ப்பாட் டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்திய மருத்துவ சங்கம் நாடு முழுவதும் 24 மணி நேர வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்தது. அதன்படி நாடு முழுவதும் மருத்துவர்கள் நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை பணிகளை புறக்கணித்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் 30 ஆயிரத் துக்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகளில் பணி யாற்றும் மருத்துவர்கள் புறநோயாளிகள் பிரிவு உள்ளிட்ட சிகிச்சைகளை புறக்கணித்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றனர். இதனால், நோயாளிகள் பாதிக்கப்பட்டனர். அவசர சிகிச்சைகளில் மட்டும் மருத்துவர்கள் பணியில் ஈடுபட்டனர்.

தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு எதிர்ப்பு தெரி வித்து தமிழகத்தில் அரசு மருத்துவ மனைகளில் மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடாமல் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றினர். சென்னையில் சென்னை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மருத்துவர்கள் கருப்புச் சட்டை, கருப்பு பேட்ஜ் அணிந்து பகல் 12.30 மணி முதல் 1.30 மணி வரை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் (எஸ்டிபிஜிஏ) மாநில நிர்வாகி பெருமாள் பிள்ளை தலைமையில் நடைபெற்ற தர்ணா போராட்டத்தில் சமூக சமத்துவத்துவத்துக்கான மருத்து வர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் மற்றும் இந்திய மருத்துவச் சங்கம் நிர்வாகிகள் பங்கேற்றனர். வேலூரில் எஸ்டிபிஜிஏ அமைப்புச் செயலாளர் ஏ.ராமலிங்கம் தலை மையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

இதேபோல் தமிழகம் முழு வதும் அரசு மருத்துவமனை களில் தர்ணா, ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x