

சென்னை
சென்னையில் கோயம்பேடு - பூந்த மல்லி, சைதாப்பேட்டை - சிறுசேரி உட்பட மொத்தம் 7 வழித்தடங்களில் சுமார் 96.7 கி.மீ தூரத்துக்கு துரித பேருந்து சேவை திட்டத்தை (பிஆர்டிஎஸ்) கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் பயண நேரத்தை 40 சதவீதம் குறைக்க முடியும்.
நாட்டில் வாகனங்களின் எண் ணிக்கை பல மடங்கு அதிகரித்து வருவதால், பெரிய நகரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதைக் குறைக்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் பல் வேறு திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின் றன. பெரிய நகரங்களில் தற்போது உள்ள சாலைகளை விரிவாக்கம் செய்து, பேருந்துகளுக்கு என தனிப் பாதை ஒதுக்கி அதில் துரித பேருந்து கள் இயக்கப்படுகின்றன.
இத்திட்டம் தற்போது அகமதா பாத், புனே, இந்தூர், ஹூப்ளி உள்ளிட்ட நகரங்களில் செயல் படுத்தப்பட்டு வருகிறது. இதற் கிடையே, சென்னையிலும், இந்த துரித பேருந்து சேவை திட்டம் (பிஆர்டிஎஸ்) கொண்டுவரப் படவுள்ளது.
இதற்காக, சென்னையில் முக் கியமான சாலைகளில் கடந்த சில மாதங்களாக பல்லவன் கன்சல் டன்சி ஆய்வு மேற்கொண்டது. இந் நிலையில், சென்னையில் 7 வழித் தடங்களில் மொத்தம் 96.7 கி.மீ தூரத்துக்கு துரித பேருந்து சேவை திட்டத்தை (பிஆர்டிஎஸ்) செயல் படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
கோயம்பேடு மதுரவாயல் - பூந்தமல்லி (12.4 கி.மீ) , கோயம்பேடு டன்லப்- அம்பத்தூர் (7.7 கி.மீ), கோயம்பேடு பாடி- மாதவரம் (12.4 கி.மீ), சைதாப்பேட்டை ஓஎம்ஆர்-சிறுசேரி (24.8 கி.மீ), சைதாப்பேட்டை தாம்பரம் - மகேந் திரா சிட்டி (18.2 கி.மீ), கோயம் பேடு சிஐடி நகர் - சைதாப் பேட்டை (9 கி.மீ), குரோம்பேட்டை - துரைப்பாக்கம் (10.6 கி.மீ) வழித் தடங்களில் துரித பேருந்து சேவை இயக்ப்பபட உள்ளது.
இதுதொடர்பாக தமிழக போக்கு வரத்து துறை அதிகாரிகள் கூறியது: மாநகர பேருந்துகளுடன், தனி யார் வாகனங்களும் செல்வதால் சென்னையில் முக்கிய சாலைக ளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. போக்கு வரத்து நெரிசலை குறைக்கவும், விரைவாக செல்லவும் மாநகர பேருந்துகளுக்கு என தனிப் பாதைகள் அமைக்கும் திட்டத்தில் கவனம் செலுத்தி வருகிறோம்.
அந்த வகையில் பிஆர்டிஎஸ் திட்டத்தை தமிழக அரசு செயல் படுத்தவுள்ளது. தனிப்பாதைகளில் பேருந்துகளை இயக்குவதால், போக்குவரத்து நெரிசலும், விபத்து களும் குறையும். பாதுகாப்பான பயணம் கிடைத்தால், மக்கள் சொந்த வாகனங்களின் பயன் பாட்டை குறைப்பார்கள். சுற்றுச் சூழல் பாதிப்பும் குறையும்.
இதுதொடர்பாக வரும் 3, 4-ம் தேதியில் அரும்பாக்கத்திலும், 5-ம் தேதி முகப்பேரிலும், 6-ம் தேதி காரப்பாக்கத்திலும், 7-ம் தேதி நந்தனத்திலும், 8-ம் தேதி ஆலந் தூரிலும் மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தவுள்ளோம்.மக்கள், குடியிருப்பு சங்கங்கள், வணிகர் கள் உட்பட அனைவரும் வந்து தங்களது கருத்துகளை தெரிவிக்க லாம் என்றனர்.
இதுதொடர்பாக சென்னை ஐஐடியின் பேராசிரியர் ஒருவர் கூறும்போது, “பெரிய மாநகரங்க ளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், தனியார் வாகன பயன் பாட்டை குறைக்கவும், விரைவாக பயணம் செய்யவும் பிஆர்டிஎஸ் திட்டம் வசதியாக இருக்கும். உலகின் பல்வேறு வளர்ந்த நாடுக ளில் இத்திட்டம் சிறப்பாக மேற் கொள்ளப்பட்டு வருகிறது.
ஒதுக்கப்படும் தனிப்பாதையில் பேருந்துகள் இயக்குவதால் தற் போதுள்ளதை காட்டிலும் 40 சதவீ தம் பயண நேரத்தை குறைக்க முடி யும். பிரேசில், கொலம்பியாவின் நகரங்கள் முழுவதிலும் இத்திட்டம் செயல்படுகிறது’’ என்றார்.