பிறப்புச் சான்று பெற கர்ப்பிணிகள் பதிவு கட்டாயமாக்கப்பட்டதால் தமிழகத்தில் குறைந்துவரும் தாய்-சேய் இறப்பு விகிதம்: 2 ஆண்டுகளில் கர்ப்பிணிகள் பதிவு ஒரு லட்சம் அதிகரிப்பு

பிறப்புச் சான்று பெற கர்ப்பிணிகள் பதிவு கட்டாயமாக்கப்பட்டதால் தமிழகத்தில் குறைந்துவரும் தாய்-சேய் இறப்பு விகிதம்: 2 ஆண்டுகளில் கர்ப்பிணிகள் பதிவு ஒரு லட்சம் அதிகரிப்பு
Updated on
2 min read

க.சக்திவேல்

கோவை

கர்ப்பிணிகள் அனைவரும் 12 வாரத்துக்குள் ‘பிக்மி’ (பேறுசார், குழந்தைகள் நல அடையாள எண்- PICME - Pregnancy and Infant Cohort Monitoring and Evaluation) மென்பொருளில் பதிவு செய்வது கடந்த 2017 அக்டோபர் முதல் தமிழகத்தில் கட்டாயமாக்கப்பட்டது. இதன்மூலம் கர்ப்பிணிகளுக்கு கிடைக்கும் தாய்-சேய் நல கவனிப்புகள் அனைத்தும் மென்பொருளில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.

தங்கள் வீடுகளுக்கு அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகளில் கர்ப்ப கால விவரங்களை பதிவு செய்து, ‘பிக்மி' (PICME) அடையாள அட்டையை கர்ப்பிணிகள் பெறலாம். இவ்வாறு பதிவு செய்வதால் தேவையான கர்ப்பகால ஆலோசனைகள், ஆய்வக பரிசோதனை, சிகிச்சை, தொடர் பராமரிப்பு, பிரசவத்தின்போது ஏற்படும் சிக்கல்கள் தவிர்க்கப்பட்டு தாய்-சேய் இறப்பு விகிதம் தமிழகத்தில் குறைந்து வருகின்றது.

இதுதொடர்பாக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத் துறை (டிபிஎச்) இயக்குநர் டாக்டர் க.குழந்தைசாமி கூறியதாவது:

வசதி இருந்து தனியார் மருத்துவ மனைகளில் கர்ப்ப கால சிகிச்சை பெறு வோர், அரசு மருத்துவமனைகளில் மகப் பேறு கவனிப்பு பெறுவோர், பணி நிமித்த மாக வெளியூர்களுக்கு இடமாறுதல் ஆனவர் கள் என அனைத்து கர்ப்பிணிகளும் கட் டாயம் தங்கள் விவரங்களை பதிவு செய்து கிராம, நகர சுகாதார செவிலியரிடம் ‘பிக்மி’ அடையாள அட்டையைப் பெற வேண்டும். அவ்வாறு பெறவில்லையெனில் குழந்தைக்கு பிறப்புச் சான்றிதழ் பெற முடியாது. இந்த நடைமுறையால் கர்ப்பிணிகள் யாரும் விடுபடாமல் பதிய முடிகிறது.

இதன்மூலம் தமிழகத்தில் உள்ள கர்பிணிகளின் சரியான எண்ணிக்கை அரசுக்கு கிடைப்பதோடு, அவர்களின் நலன் எப்படி இருக்கிறது என்ற தகவல் களும் கிடைக்கின்றன. பிக்மி பதிவு கட் டாயமாக்கப்பட்ட பிறகு, கடந்த 2 ஆண்டு களில் மட்டும் கர்ப்பிணிகள் பதிவு ஒரு லட் சம் வரை அதிகரித்துள்ளது. குறிப்பாக நகரங் களில் வசிப்போர், தனியார் மருத்துவ மனைகளுக்குச் செல்வோர் பதிவு செய்யும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

சிறப்பம்சம் என்ன?

‘பிக்மி’ எண் இருந்தால் மட்டுமே பிறப் புச் சான்று வழங்கப் படுவதால் போலியாக பிறப்புச் சான்று பெற முடியாது. மேலும், பிறப்பு, இறப்புச் சான்று பெற யாரும் அரசு அலுவலகங்களை அணுக வேண்டிய தில்லை. இ-சேவை மையத்திலோ, வீட் டிலோ, பிரவுசிங் சென்டர்களிலோ தாய், தந்தை பெயர், முகவரி, குழந்தையின் பிறந்த தேதியை வைத்தே அசல் பிறப்புச் சான்றை http://crstn.org/birth_death_tn/ என்ற இணையதளம் மூலம் கட்டணமின்றி பெற்றுக்கொள்ளலாம்.

‘பிக்மி' மென்பொருளில் கர்ப்பிணிகளின் விவரம் பதிவு செய்வதால், அவர்களுக்கு முறையாக ஊசி போடப்பட்டுள்ளதா, உயர் ரத்த அழுத்தம் உள்ளதா உள் ளிட்ட அனைத்தையும் தொடர்ந்து கண்காணிக்க முடிகிறது. தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் விவரங்களும் பதி வேற்றம் செய்யப்படுகின்றன. இதனால், ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகள் இறப்பு விகிதம், ஆயிரம் குழந்தை களுக்கு 17 என்ற நிலை யில் இருந்து, ஒரு புள்ளி குறைந்து தற்போது 16 ஆக உள்ளது. அதேபோல, கர்ப்பகால மரணமும் குறைந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறி னார்.

ஆலோசனை பெற அழைக்கலாம்

‘பிக்மி' எண் இருந்தால் மட்டுமே தகுதிவாய்ந்த கர்ப்பிணிகள் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தில் ரூ.18,000 பெற முடியும். அதோடு, ஊட்டச்சத்து பெட்டகமும் அவர்களுக்கு கிடைக்கும். கர்ப்பிணிகள், பிரசவித்த தாய்மார்கள் அவ்வப்போது தொலைபேசியில் தொடர்புகொண்டு கர்ப்ப காலம், பிரசவத்துக்கு பிறகு தேவைப்படும் ஆலோசனைகளை 102 அல்லது 104 என்ற எண்ணை தொடர்புகொண்டு பெறலாம் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in