மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை அனைத்து மாநிலங்களும் எதிர்க்க வேண்டும்: நடிகை ரோகிணி

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை அனைத்து மாநிலங்களும் எதிர்க்க வேண்டும்: நடிகை ரோகிணி
Updated on
1 min read

மத்திய அரசின் புதியக் கல்விக் கொள்கையை அனைத்து மாநிலங்களும் எதிர்க்க வேண்டும் என்று நடிகை ரோகிணி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

மாநில அரசு இதை எதிர்க்க வேண்டும். ரொம்ப அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். ஏழை எளிய மக்களின் வீட்டிலிருந்து வரும் குழந்தைகளுக்கான தரமான கல்வி கொடுக்காமல், சமமான கல்வியைக் கொடுக்காமல் அவர்களை எல்லா நுழைவுத் தேர்வுகளையும் கலந்து கொண்டு அதில் வெற்றி பெற்றால்தான் பட்டப்படிப்பு உள்ளிட்ட உயர்கல்வி கைகூடும் என்றேல்லாம் கூறுவது எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாதது. 

மக்கள் இதைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் இது நம்ம குழந்தைகளைப் பாதிக்கப் போகின்றது, அடுத்த தலைமுறையினரைப் பாதிக்கப் போகின்றது, இதுமட்டுமல்லாமல் கிராமத்திலிருந்து வரும் முதல் தலைமுறை  பட்டப்படிப்பு படிக்க வேண்டும் என்று வருபவர்களுக்கு இது எட்டாக்கனியாகப் போய்விடும். 

இவ்வாறு கூறினார் நடிகை ரோகிணி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in