Published : 31 Jul 2019 12:35 PM
Last Updated : 31 Jul 2019 12:35 PM

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கான தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் : திமுக இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆரூடம் 

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கான தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் என்று திமுக இளை ஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

வேலூர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்துக்கு ஆதரவாக 3 நாள் பிரச்சாரத்தில் திமுக இளைஞ ரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஈடுபட்டு வருகிறார்.

இரண்டாம் நாளான நேற்று குடியாத்தம், பேரணாம்பட்டு, கே.வி.குப்பம் உள்ளிட்ட பகுதி களில் திறந்த ஜீப்பில் சென்று வாக்கு சேகரித்தார். மேலும், வளத்தூர் மற்றும் மசிகம் ஆகிய கிராமங்களில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார்.

குடியாத்தம் காங்கிரஸ் ஹவுஸ் ரோடு பகுதியில் தேர்தல் பிரச் சாரத்தில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, ‘‘மாநில இளைஞரணி செயலாளர் என்ற முறையில் முதல் முதலாக திமுக வேட்பாளர் கதிர்ஆனந்துக்காக வாக்கு கேட்டு வந்திருக்கிறேன். நடந்து முடிந்த தேர்தலில் பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முழுவதும் மக்கள் தகுந்த பதிலடி கொடுத்தனர். இப்போது இன்னொரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. கிரிக்கெட்டில் சொல்வதுபோல் கடைசி விக்கெட். அது கதிர்ஆனந்தின் வெற்றியாக இருக்கும்’’ என்றார்.

பேரணாம்பட்டு அடுத்த மசிகம் கிராமத்தில் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, ‘‘கடந்த ஏப்ரல் 18-ம் தேதி நடந்த குடியாத்தம் தொகுதிக்கான சட்டப்பேரவை இடைத் தேர்தலில் திமுக வேட்பாளர் வெற்றிபெற்றார். அப்போதே வேலூர் மக்களவைத் தேர்தலையும் நடத்தி இருந்தால் கதிர்ஆனந்த் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றி ருப்பார். திமுகவின் வெற்றியை தள்ளித்தான் போட்டுள்ளனர். அதை யாராலும் தடுக்க முடி யாது. இந்தியா முழுவதும் மோடி வெற்றிபெற்றிருக்கலாம். ஆனால், தமிழ்நாட்டில் இனிமேல் திரும்பிக்கூட பார்க்க முடியாது.

தமிழ்நாடு முழுவதும் ஆட்சி மாற்றத்துக்கான தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும். ஒரு பேரிடரில் தமிழகம் தவிக்கவிடப்பட்டுள்ளது. திமுக எம்பிக்களால் உங்களுக்கு என்ன நன்மை என எடப்பாடி பழனிசாமி கேட்டு வருகிறார். ஆனால், ஒவ்வொரு நாளும் நமது எம்பிக்கள் மக்களுக்காக குரல் கொடுத்து வருகின்றனர். ஆகஸ்ட் 7-ம் தேதி மறைந்த தலைவர் கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு தினம். அந்த நாளில் கதிர் ஆனந்தின் வெற்றியாக இருக்க வேண்டும்’’ என்றார்.

ஆம்பூர்

ஆம்பூர் அடுத்த சின்னவரிகம் கிராமத்தில் நேற்று பிற்பகல் 2 மணி அளவில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்தை ஆதரித்து உதய நிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். அப்போது, எம்எல்ஏக்கள் நந்த குமார் (அணைக்கட்டு), வில்வ நாதன் (ஆம்பூர்) உட்பட பலர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x