Published : 31 Jul 2019 12:23 PM
Last Updated : 31 Jul 2019 12:23 PM

விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்தும் மணல் கடத்தல் வழக்குகள் பதிவு செய்ய தீவிரம் காட்டாத வருவாய்துறையினர்

தமிழகத்தில் அனைத்து நீர் நிலைகளும் வறண்டு நிலத்தடி நீர் மட்டம் அதளபாதா ளத்திற்கு சென்று விட்டன. ஆறுகளில் மட்டுமே மணல் அள்ளி வந்த கொள்ளையர்கள் தற்போது வறண்ட ஏரிகளிலும் மணல் கொள்ளையை தொடர்கின்றனர்.

இதற்கிடையே புதுக்கோட்டை மாவட் டம், ஆளப்பிறந்தான், குடிகாடு பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த பொதுநல வழக்கில், நீதிபதிகள் சுந்தரேசன், சதீஷ் குமார் இணைந்து 24.9.2018 அன்று அளித்த தீர்ப்பில், 'வருவாய்துறை அதிகாரிகள் தங்கள் பணியை உணர்ந்து செயல்பட வில்லை. மறு உத்தரவு வரும் வரை மணல் கடத்தலில் ஈடுபடும் வாகனங்கள் மற்றும் மாடுகளை தவிர்த்து மாட்டுவண்டிகள் எதை யும் விடுவிக்கக் கூடாது' என்று உத்தர விட்டனர்.

இதே போல அறந்தாங்கியைச் சேர்ந்த முத்து என்பவர் இது தொடர்பாக தாக்கல் செய்த மனுவிற்கு 29.10.2018ம் தேதி இதே நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், 'கனிமவள சட்டத்தின்படி, மணல் கடத்தல் குற்றங்களில் ஈடுபடுவோரை வருவாய்துறையினர் பிடித் தால் தனிநபர் குற்றமுறையீடு செய்து குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.மேலும், இவ்வழக்கு தொடர்பாக சம்பந்தப்பட்ட காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அதே போல் காவல் துறையினர் பிடித்தால் வழக்குப்பதிவு செய்து வருவாய்துறையின ருக்கு தகவல் தெரி விக்க வேண்டும்.

தொடர்ந்து வருவாய்துறையினர் தனிநபர் குற்றமுறையீடை குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வழக்கை பதிவு செய்யும் குற்றவியல் நீதிமன்றம், மாவட்ட அளவில் மணல் கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் அமர்வு நீதிமன் றத்திற்கு அனுப்ப வேண்டும். வருவாய் துறையினர், காவல்துறையினர் பதிவு செய்த இரு வழக்குகளையும் ஒரே வழக்காக விசாரிக்க வேண்டும்' என்று உத்தரவிட்டனர்.

இது குறித்து வழக்கறிஞர்களிடம் கேட்ட போது, உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்பின்படி கடந்த ஜூன் 13ம் தேதி மாவட்டம் தோறும் மணல் கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டு, நீதி மன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆனால், வருவாய்துறையினர் மணல் கடத்தல் வழக்குகள் ஏதும் பதிவு செய்ய வில்லை என்றே தெரிகிறது. மேலும், போலீஸார் நேரடியாக மணல் கடத்தல் வழக்குகள் பதிவு செய்யமுடியாத அளவுக்கு அரசாணை எண் 12/2.2.2009 தடுக்கிறது. இதனால் மணல் திருட்டு வழக்குகளே பதிவு செய்யப்படுகிறது.

அரசாணை எண் 62/1.10.2008ன் படி மணல் கடத்தலில் தொடர்புடைய அரசு அதிகாரிகளை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம் என்றும் தெரி விக்கப்பட்டுள்ளது. காவல்துறையினரால் நேரடியாக மணல் கடத்தல் வழக்குகள் பதிவு செய்ய முடியாமல் இருப்பது மணல் கடத்தல்காரர்களுக்கு சாதகமாக உள்ளது என்று தெரிவித்தனர்.

வருவாய் துறையின் சார்பில், ஓவ்வொரு ஊராட்சிக்கும் கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர்கள் இருந்தும், மணல் கடத்தல் வழக்குகள் பதிவு செய்வதில் தீவிரம் காட்டவில்லை என்று காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

உதாரணமாக, விழுப்புரம் மாவட்டத்தில் மணல் திருட்டு தொடர்பாக கடந்த ஜன வரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை காவல் துறையினரால் 829 வழக்குகள் பதிவு செய்து 585 பேரை கைது செய்தனர். மேலும் ஜேசிபி, டிப்பர், லாரி, டிராக்டர், மாட்டுவண்டி உட்பட 838 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதே போல, இம்மாவட்டத்தில் வரு வாய்துறையினர் பதிவு செய்த வழக்கு களின் விவரங்களை பெற கனிமவளத் துறை, கோட்டாட்சியர் அலுவலகங்கள் என முயற்சித்தும், வட்டாட்சியர் அலுவல கங்களை தொடர்பு கொள்ளுங்கள் என்றும், கோட்டாட்சியர் அலுவலகங்களை தொடர்பு கொள்ளுங்கள் என்றும் மாறி மாறி பதில் சொல்லி அலைகழிக்கப்படுகிறதே தவிர, விவரங்கள் எதையும் தரவே இல்லை.

- எஸ்.நீலவண்ணன் 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x