

பாளையங்கோட்டையில் தனியார் மீன்பிடி பண்ணை அருகே கடந்த 4-ம் தேதி முட்புதருக்குள் 30 முட்டைகளுடன் பதுங்கியிருந்த 10 அடி நீள மலைப்பாம்பு வனத் துறையினரால் பிடிக்கப்பட்டது. மீட்கப்பட்ட முட்டைகள் இயற்கை முறையில் அடைகாக்க வைக்கப் பட்டதை அடுத்து, அதிலிருந்து பாம்பு குட்டிகள் நேற்றுமுதல் வெளிவரத் தொடங்கின.
பாளையங்கோட்டை கக்கன் நகரை அடுத்த கிருபாநகர் பகுதி யில் ஒரு தனியார் மீன்பிடி பண்ணை அமைந்துள்ளது. இதன் பின்புறமுள்ள முட்புதர் பகுதியில் மலைப்பாம்பு நடமாட்டம் இருப் பது குறித்து, தீயணைப்புத் துறை யினருக்கு தகவல் கிடைத்தது.
பாளையங்கோட்டை தீய ணைப்பு நிலைய அலுவலர் வீரராஜா தலைமையில் தீய ணைப்பு படையினர் கடந்த 4-ம் தேதி தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, முட்புதருக்குள் பதுங்கி யிருந்த 10 அடி நீள மலைப்பாம் பும், 30 பாம்பு முட்டைகளும் மீட்கப் பட்டன. அவற்றை தீயணைப்பு படையினர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் அந்த மலைப்பாம்பை களக்காடு மலைப்பகுதியில் கொண்டு விட்டனர். பொன்னாக்குடியிலுள்ள வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் இயற்கையான சூழலில் முட்டைகள் அடைகாக்க வைக்கப்பட்டன.
முட்டைகள் கைப்பற்றப்பட்ட இடத்திலிருந்து அள்ளி எடுத்துவரப்பட்ட மணலால் மேடு அமைத்து, அதில் இலை தளைகளை கொட்டி இயற்கை முறையிலான இன்குபேட்டரை அமைத்து அதில் முட்டைகளை வனத்துறையினர் வைத்திருந்தனர். 26 நாட்களுக்குப்பின் நேற்று ஒரு சில முட்டைகளில் இருந்து பாம்பு குட்டிகள் வெளிவரத் தொடங்கின. 30 முட்டைகளில் 6 முட்டைகள் கெட்டுப்போயுள்ளதாகவும், மீதமுள்ள முட்டைகளில் இருந்து பாம்பு குட்டிகள் வெளிவரும் என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.