Published : 31 Jul 2019 07:42 AM
Last Updated : 31 Jul 2019 07:42 AM

சிறுபான்மை மக்களிடம் இருந்து அதிமுகவை பிரிக்க ஸ்டாலின் முயற்சி: வேலூர் பிரச்சாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு

சிறுபான்மை மக்களிடம் இருந்து அதிமுகவை பிரிக்க பல வழிகளில் ஸ்டாலின் முயற்சித்து வருகிறார் என துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் குற்றம்சாட்டினார்.

வேலூர் மக்களவைத் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து பேரணாம்பட்டில் நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, ‘‘தேர்தலில் ஸ்டாலின் பல பொய்களைச் சொல்லி மக்களை நம்ப வைத்து தற்காலிக வெற்றியை பெற்றிருக்கலாம். ஆனால், தமிழக மக்கள் நிலையான ஆட்சியை அளிப்பதற்காக ஆளும் கட்சிக்காக இடைத் தேர்தலில் 9 தொகுதிகளில் வெற்றியை கொடுத்துள்ளனர்.

அதிமுக சாதி மதங்களுக்கு அப்பாற்பட்ட இயக்கம். அனைத்து மக்களையும் சகோதரர்களாக பார்க்கின்ற இயக்கம் அதிமுக. சிறுபான்மை மக்களுக்கு இதுவரை எந்த இயக்கமும் செய்யாத பாது காப்பை தந்த ஒரே இயக்கம் அதிமுகதான். சிறுபான்மை மக்களி டம் இருந்து அதிமுகவை பிரித்து விடலாம் என பல வழிகளில் ஸ்டாலின் முயற்சித்து வருகிறார். அது ஒருபோதும் நடக்காது.

தமிழக அரசு ரூ.28 ஆயிரம் கோடி நிதியை செலவழிக்காமல் திருப்பி அனுப்பியதாக ஸ்டாலின் கூறியுள்ளார். பொதுவாக ஒரு திட்டத்துக்கு நிதியை ஒதுக்கிய ஓராண்டுக்குள் முடிக்க வேண்டும். இல்லாவிட்டால், செலவு செய்த தொகையை போக மீதமுள்ள தொகை சேமிப்பாக அரசு கஜானா வுக்கு சென்றுவிடும். அந்தப் பணம் வேறு எங்கும் போகாது. திமுக ஆட்சியில் ரூ.8,878 கோடி அரசு கஜானாவுக்கு திருப்பி அனுப்பி உள்ளனர். எந்த அரசாக இருந் தாலும் அந்த நிதி சேமிப்பு கணக் கில் வைக்கப்படும். இதை தெரிந்து கொண்டே ஸ்டாலின் குற்றச்சாட்டு வைக்கிறார். திமுகவை தமிழகத் தில் நுழைய விட்டால் அராஜக ஆட்சிதான் நடைபெறும் என்பதில் மக்கள் தெளிவாக உள்ளனர்’’ என்றார்.

தோல்விக்குப் பிறகு வெற்றி

வேலூரில் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, ‘‘ஒரு தொண்டன் அதிமுகவில் முதல்வராகவும், கட்சி யின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளராக வர முடி யும். ஆனால், திமுவில் முடியுமா? கட்சியின் தலைமை பொறுப்புக்கு வர முடியுமா? இந்த இயக்கம் வீழ்ந்தாலும் எழும். தோல்விக்குப் பிறகு மிகப்பெரிய வெற்றி வரும் என்பது வரலாறு.

2006-ல் ஆட்சிக்கு வந்த திமுக வால் 5 ஆண்டுகளில் மின்சார தட்டுப்பாட்டை நீக்க முடிய வில்லை. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த இரண்டே ஆண்டுகளில் அதிக அளவில் மின் உற்பத்தி செய்து மின் மிகை மாநிலமாக தமிழகத்தை மாற்றினார். சூரிய ஒளியிலும் காற்றாலை மின்சார உற்பத்தி இந்தியாவிலே தமிழகத் தில்தான் அதிகம். மின் துறையில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழகம் விளங்குகிறது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x