Published : 31 Jul 2019 07:40 AM
Last Updated : 31 Jul 2019 07:40 AM

முதுநிலை படிப்புக்கான ‘ஆயுஷ்’ தேர்வில் அகில இந்திய அளவில் அறந்தாங்கி மருத்துவர் முதலிடம்

முதுநிலை படிப்புக்காக நடத்தப் பட்ட ‘ஆயுஷ்’ தேர்வில் அகில இந்திய அளவில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பெண் மருத்துவர் க.பொன்மணி முதலி டம் பிடித்துள்ளார்.

அறந்தாங்கி அருகே உள்ள கூகனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்.கணேசன். விவசாயியான இவரது மகள் பொன்மணி. சுப்பிரமணியபுரத்தில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 2013-ல் பிளஸ் 2 படித்தார். அதில், 1,062 மதிப்பெண்கள் பெற்ற இவர், சேலம் சிவராஜ் சித்த மருத்துவக் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டில் இளநிலை சித்த மருத்துவம் (பிஎஸ்எம்எஸ்) படித்தார்.

இந்நிலையில், முதுநிலை இந்திய மருத்துவக் கல்விக்காக நடத்தப்பட்ட தேர்வை எழுதிய இவர், அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.

இதுகுறித்து க.பொன்மணி, ‘இந்து தமிழ்' நாளிதழிடம் கூறிய தாவது:

“எம்பிபிஎஸ் கனவில் படித் தேன். ஆனால், சித்தாதான் கிடைத்தது. எனினும், அதையும் விருப்பத்துடன் படித்தேன். இந்திய மருத்துவக் கல்வியின் (ஆயுஷ்) முதுநிலை பிரிவுக்கு நடத்தப்பட்ட பொது நுழைவுத் தேர்வுக்கான முடிவு நேற்று முன்தினம் இரவு வெளியிடப்பட்டது.

இதில், 400 மதிப்பெண்களுக்கு 377 மதிப்பெண்கள் பெற்று இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. சென்னை தாம்பரத்தில் உள்ள தேசிய சித்தா ஆராய்ச்சி மையத்தில் மேற் படிப்பு பயில உள்ளேன்” என் றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x