

லாட்டரி அதிபர் மார்ட்டின் நிறுவன ஊழியர் பழனிசாமி நீரில் மூழ்கி இறக்கவில்லை என்று, நீதிமன்றத் தில் தாக்கல் செய்யப்பட்ட மறு பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ட்டினுக்கு சொந்தமான நிறுவனங்களில், ஒரே நேரத்தில் 70-க்கும் மேற்பட்ட இடங்களில் வரு மான வரித் துறையினர் சோதனை யில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதி யாக, கோவையில் மார்ட்டினுக்கு சொந்தமான நிறுவனத்தில் காசாள ராக பணிபுரிந்து வந்த, உருமாண் டம்பாளையத்தைச் சேர்ந்த பழனி சாமியிடமும் விசாரிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த மே 3-ம் தேதி காரமடை அருகே வெள்ளியங் காடு நீர்த்தேக்க குட்டையில் பழனி சாமியின் சடலம் கிடந்தது தெரிய வந்தது. போலீஸார் அதை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
தந்தையின் சாவில் மர்மம் உள்ளதாக, மகன் ரோகின்குமார் புகார் தெரிவித்தார். கடந்த மே 5-ம் தேதி பழனிசாமியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால், அவரது உடலில் இருந்த காயங்கள் குறித்து பிரேத பரி சோதனை அறிக்கையில் குறிப் பிடப்படவில்லை என்றும், மீண்டும் பிரேத பரிசோதனை நடத்த வேண்டு மென வலியுறுத்தியும், குற்றவியல் நீதித் துறை நடுவர் மன்றத்தில் மகன் மனு தாக்கல் செய்தார்.
இதையடுத்து, பழனிசாமியின் உடலை, மீண்டும் பிரேத பரி சோதனைக்கு உட்படுத்த வேண்டு மென, நீதித்துறை நடுவர் எம்.ராம தாஸ் உத்தரவிட்டார்.
அதன்படி, கோவை அரசு மருத்துவமனையில் கடந்த மே 28-ம் தேதி மறு பிரேத பரிசோதனை நடைபெற்றது. சென்னை ராமச் சந்திரா மருத்துவமனை மருத்துவர் பி.சம்பத்குமார், கோவை 8-வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி எம்.ராமதாஸ் ஆகியோர் முன் னிலையில், கன்னியாகுமரி, சேலம் மருத்துவக் கல்லூரிகளின் சட்டம் சார்ந்த மருத்துவத் துறை பேராசிரி யர்கள் அடங்கிய குழுவினர், மறு பிரேத பரிசோதனை செய்தனர்.
இந்நிலையில், மறு பிரேத பரி சோதனை அறிக்கையை, அக்குழு வில் இடம்பெற்றிருந்த டாக்டர் சம்பத்குமார், கோவை 8-வது குற்ற வியல் நடுவர் நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்துள்ளார்.
டாக்டர் பி.சம்பத்குமார் கூறும் போது, “மறு பிரேத பரிசோதனை யில், நீரில் மூழ்கி பழனிசாமி இறக்க வில்லை என்பது தெரியவந்துள் ளது. அவர் கொலை செய்யப் பட்டாரா என்பது போலீஸ் விசார ணையில்தான் தெரியவரும்” என்றார்.