

இந்தியாவின் முதல் பெண் மருத் துவர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்த நாளை தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் மருத்துவ மனை தினமாக கொண்டாடப் பட்டது.
இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்த தினமான ஜூலை 30-ம் தேதி இந்த ஆண்டு முதல் மருத்துவ மனை தினமாக கொண்டாடப்படு கிறது. அதன்படி, நேற்று தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனை களில் பல்வேறு கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டன. சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் டீன் சாந்திமலர் 25 கிலோ கேக்கை வெட்டி கொண்டாட்டத்தை தொடங் கிவைத்தார். இதில் டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர் கள் 200 பேர் உடல் உறுப்பு தானம் செய்வதாக விண்ணப்பம் கொடுத் தனர். டாக்டர்கள் தங்களுடைய துறைகளின் செயல்பாடுகள் குறித்து அரங்கம் அமைத்து விளக்கினர். டாக்டர்கள், பொதுமக்கள் இடையே கலந்துரையாடல், கலைநிகழ்ச்சி கள் நடைபெற்றன. மருத்துவமனை ஆர்எம்ஓ ரமேஷ் உள்ளிட்ட 100 பேர் ரத்தம் தானம் செய்தனர்.
எழும்பூரில் உள்ள அரசு மகப் பேறு மருத்துவமனையில் இயக்கு நர் எஸ்.ஷோபா தலைமையில் கர்ப் பிணிகளுக்கு சிகிச்சை அளிக்கும் முறைகள் குறித்து விளக்க கண் காட்சி நடைபெற்றது. கர்ப்பிணி களுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டு உணவு, உடை வழங்கப்பட்டது. செவிலியர் மாணவிகள் கலைநிகழ்ச் சிகளை நடத்தினர்.
எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் இயக்குநர் கே.ஜெயச்சந்திரன் தலைமையில் குழந்தைகளுடன் கேக் வெட்டியும், யோகா பயிற்சி நடத்தியும் கொண் டாடப்பட்டது. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் டீன் வசந்தா மணி தலைமையில் வளைகாப்பு நடைபெற்றது. இதேபோல், சென்னை அரசு பொது மருத்துவ மனையில் டீன் ஜெயந்தி தலை மையிலும் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் டீன் நாராயண பாபு தலைமையிலும் திருவல்லிக் கேணி கஸ்தூரிபா காந்தி தாய்சேய் நல மருத்துவ மனையில் இயக்கு நர் விஜயா தலைமையில் மருத்துவ மனை தினம் கொண்டாடப்பட்டது.
தமிழகம் முழுவதும் அரசு மருத் துவமனைகளில் உள்ள வசதிகள், சாதனைகள், புதிய முயற்சிகள், உயிர்காக்கும் சிகிச்சை முறைகள், நலவாழ்வு விழிப்புணர்வு கண்காட்சி நடத்தப்பட்டன. தொண்டு நிறுவனங் கள், கொடையாளர்கள், சமூக அமைப்புகள், கார்ப்பரேட் நிறுவ னங்கள் கவுரவிக்கப்பட்டன. சிறப் பாக பணியாற்றும் பணியாளர்கள் பாராட்டப்பட்டனர். பணியாளர்க ளின் குடும்பத்தினருக்கு விளை யாட்டு, பல்சுவை போட்டிகள் நடத்தப்பட்டன.
கர்ப்பிணிகளுக்கு யோகா
சென்னை அரசு மருத்துவமனை களில் நடைபெற்ற மருத்துவமனை தினத்தில் கலந்து கொண்ட சுகா தாரத்துறைச் செயலாளர் பீலா ராஜேஷ், “தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் இன்று முதல் கர்ப்பிணிகளுக்காக சிறப்பு யோகா பயிற்சி தொடங் கப்பட்டுள்ளது. இதன்மூலம் சுகப் பிரசவம் பெறுவதற்கான வாய்ப்பு கள் ஏற்படும். யோகா பயிற்சியை அனைத்து மருத்துவமனைகளிலும் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். கர்ப்பிணிகளுக்காக அறிமுகப் படுத்தப்பட்ட ‘பிக்மி' செயலி மூலம் அனைத்து செயல்பாடுகளும் கண் காணிக்கப்படும். போராட்டங்களில் ஈடுபட்டுள்ள அரசு டாக்டர்களின் கோரிக்கைகள் பரிசீலனை செய் யப்படும்” என்றார்.