ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: ஆக.20-க்கு தள்ளிவைப்பு - தொடர் நிலுவையால் சந்தேகப் பார்வை விழும் என நீதிபதிகள் கருத்து

ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: ஆக.20-க்கு தள்ளிவைப்பு - தொடர் நிலுவையால் சந்தேகப் பார்வை விழும் என நீதிபதிகள் கருத்து
Updated on
2 min read

ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக் களை தகுதி நீக்கம் செய்யக் கோரும் வழக்கு தொடர்ந்து நிலுவையில் இருந்தால், நீதிமன்றம் மீது சந்தேகப் பார்வை விழக்கூடும் என்று கருத்து தெரிவித்துள்ள உச்ச நீதிமன்ற நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 20-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அரசு மீது 2017 பிப்ரவரி 18-ம் தேதி நம் பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. தற்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் க.பாண்டியராஜன், எம்எல்ஏக்க ளான செம்மலை, ஆறுகுட்டி, சண் முகநாதன், மாணிக்கம், மனோக ரன், மனோரஞ்சிதம், சரவணன், சின்னராஜ், ஆர்.நடராஜ் ஆகிய 11 பேரும் முதல்வர் பழனிசாமிக்கு எதிராக வாக்களித்தனர். 122 உறுப் பினர்கள் ஆதரவால் பழனிசாமி அரசு வெற்றி பெற்றது.

இந்த நிலையில், ஓ.பன்னீர்செல் வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி திமுக கொறடாவான சக்கரபாணி எம்எல்ஏ மற்றும் தினகரன் ஆதரவு முன்னாள் எம்எல்ஏ வெற்றிவேல் உள்ளிட்ட பலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமை யிலான அமர்வில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நடந்த வாதம் வருமாறு:

தமிழக சட்டப்பேரவைத் தலை வர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி: ஓபிஎஸ் உள்ளிட்ட 11 பேர் மீதும் கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோருகின்றனர். ஆனால், அந்த கோரிக்கையே நீர்த்துவிட்ட நிலையில் இந்த வழக்கே விசா ரணைக்கு உகந்தது அல்ல.

திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில்சிபல்: ஏற்கெ னவே வழக்கின் அனைத்து அம்சங் களையும் இதற்கு முன்பு இருந்த நீதிபதி ஏ.கே.சிக்ரி விசாரித்தார். எனவே இது விசாரிப்பதற்கு உகந்த வழக்குதான்.

நீதிபதிகள்: ‘11 எம்எல்ஏக்களை யும் தகுதி நீக்கம் செய்ய பேரவைத் தலைவருக்கு உத்தரவிட வேண் டும்’ என வைக்கப்பட்ட கோரிக்கை யும் திரும்பப் பெறப்பட்டது, அப்படி யெனில் இந்த வழக்கும் முடிந்து விட்டதுதானே?

கபில்சிபல்: பேரவைத் தலைவ ருக்கு உத்தரவிடுவது தொடர்பான வழக்கு அரசியல் சாசன அமர்வில் ஏற்கெனவே நிலுவையில் உள்ளது. அந்த வழக்கு முடியும் வரை காத்திருக்க முடியாது. எனவே, இந்த நீதிமன்றமே நேரடியாக அவர்களை தகுதி நீக்கம் செய்ய உத்தரவிடலாம்.

முகுல் ரோஹத்கி: தகுதி நீக்கம் செய்யுமாறு பேரவைத் தலை வருக்கு உத்தரவிடக் கோரிய பிரதான கோரிக்கையே திரும்பப் பெறப்பட்ட பிறகு, இந்த வழக்கே விசாரணைக்கு உகந்தது அல்ல. அப்படியிருக்க, நீதிமன்றம் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எப்படி செல்லுபடி யாகும்?

(இவ்வாறு நடந்த வாதம் பிற்பகலிலும் தொடர்ந்தது.)

கபில்சிபல்: ‘‘அரசியலமைப்பு சாசனப் பிரிவு 226-ஐ பயன்படுத்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய உயர் நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது. அதன் அடிப்ப டையில் உச்ச நீதிமன்றம் முடி வெடுக்க வேண்டும்.

இவ்வாறு வாதம் நடந்தது.

இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், ‘‘இந்த வழக்கு தொடர்ந்து நிலுவையில் இருந்தால், நீதிமன்றத்தின் மீது சந்தேகப் பார்வை விழக்கூடும்’’ என்று கருத்து தெரிவித்தனர்.

வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 20-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in