

செங்கல்பட்டு, தென்காசி மாவட் டங்களுக்காக நியமிக்கப்பட்ட தனி அதிகாரிகள் பரஸ்பரம் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலி மாவட் டத்தை பிரித்து தென்காசியை தலைமையிடமாகக் கொண்டும், காஞ்சி மாவட்டத்தை பிரித்து செங்கல்பட்டை தலைமையிட மாகக் கொண்டும் 2 மாவட் டங்கள் அறிவிக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து, சர்க்கரை துறை கூடுதல் இயக்குநராக இருந்த ஜி.கே.அருண்சுந்தர் தயாளன் செங்கல்பட்டு மாவட் டத்துக்கான தனி அதிகாரியாக வும், தமிழ்நாடு கடல்சார் வாரி யத்தின் துணைத் தலைவராக இருந்த ஏ.ஜான் லூயிஸ் தென் காசி மாவட்டத்துக்கான தனி அதிகாரியாகவும் கடந்த 26-ம் தேதி நியமிக்கப்பட்டனர். வரு வாய் நிர்வாக ஆணையருக்கு இவர்கள் உதவியாக இருப்பார் கள் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், செங்கல்பட்டு தனி அதிகாரியாக நியமிக்கப் பட்ட அருண்சுந்தர் தயாளன் தென் காசிக்கும், அங்கு நியமிக்கப்பட்ட ஜான் லூயிஸ் செங்கல்பட்டுக்கும் பரஸ்பரம் இடமாற்றம் செய்யப் பட்டுள்ளனர். இதற்கான அறி விப்பை தலைமைச் செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ளார்.