

தமிழகத்தில் வாடகை, குத்தகை பாக்கியை முறையாக வசூல் செய்யாமல், கோயில்களில் பக்தர்களிடம் கட்டணம் வசூலிப் பது எந்தவிதத்தில் நியாயம் என திருப்பூரில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் ராம.கோபாலன் கேள்வி எழுப்பினார்.
கோயில் தரிசனக் கட்டணத்தை ரத்து செய்யக்கோரி திருப்பூர் பழையபேருந்து நிலையம் முன்பு, இந்து முன்னணி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலப் பொதுச்செயலாளர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தலைமை வகித்தார்.
நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலன் பேசியதாவது: கோயில் களில் சிறப்பு தரிசனக் கட்டணம் என்ற பெயரில் பக்தர்களிடம் பணம் வசூலிக்கப்படுகிறது. கடவுள் ஒன்றும் கட்டணம் வாங்கும் காட் சிப் பொருளல்ல. கோயிலில் பக்தர்களிடம் பணம் வசூலிப்பதை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது. கிராமங்களில் உள்ள மக்கள் தங்களுடைய காணிக்கையை, முடிந்துவைத்து கோயிலில் போடு கிறார்கள். அப்படி இருக்கும்போது கடவுளை வழிபட கட்டணம் கேட் பது அநீதி.
தமிழகத்தில் வாடகை, குத்தகை பாக்கியை முறையாக வசூல் செய்யாமல், பக்தர்களிடம் கட்டணம் வசூலிப்பது எந்தவிதத்தில் நியாயம்? தரிசனக் கட்டணம் என்ற பெயரில் இந்துக்களிடம் இருந்து பணம் பெறும் தமிழக அரசு, இதர சிறுபான்மையினர் வழிபாட்டு நிர்வாகத்தில் தலையிட முடியுமா?
இந்துக்களின் கோயில்களில் குடிநீர் வசதி, அன்னதானம், பசுக்கள் சேவை இருக்க வேண்டும். அன்னதானத்தை யாரும் திடீரென கண்டுபிடிக்கவில்லை என்றார்.