Published : 30 Jul 2019 11:40 AM
Last Updated : 30 Jul 2019 11:40 AM

நீலகிரி அருகே காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி

நீலகிரி

நீலகிரி அருகே மேங்கோரேஞ்ச் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

பந்தலூர் அருகே மேங்கோரேஞ்ச் எஸ்டேட் பகுதியில் இருந்து கொளப்பள்ளிக்குச் செல்லும் சாலை உள்ளது. இந்தப் பகுதியில் எஸ்டேட் தொழிலாளர் குடியிருப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

குடியிருப்புக்கு அருகில் உள்ள எலியாஸ் கடை மற்றும் மேங்கோரேஞ்ச் ஏலமன்னா வனப்பகுதிக்குள் அடிக்கடி யானைகள் நடமாட்டம் இருக்கும். இந்நிலையில் இன்று (ஜூலை 30) அதிகாலை 3 மணியளவில் குடியிருப்பின் அருகே யானைகள் சுற்றித் திரிந்து கொண்டிருந்தன.  

அப்போது இரவு வேலை முடிந்து வந்த கருப்பையா (50) என்பவரை குடியிருப்புப் பகுதியில் சுற்றித் திரிந்த காட்டு யானை தாக்கியது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

சம்பவம் அறிந்த வனத்துறையினர்.  உடனடியாக அவரது உடலை பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். குடியிருப்புப் பகுதியில் யானை தாக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அண்மைக்காலமாக மிருகங்களின் தாக்குதல்களால் மனிதர்கள் உயிரிழப்பு அதிகமாகி வருவதால், பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்று உள்ளூர்வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆர்.டி.சிவசங்கர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x