

சென்னை
கர்நாடக மாநிலத்தின் புதிய முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள எடியூரப்பாவுக்கு, தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல் வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தின் புதிய முதல்வராக பாஜகவின் எடியூரப்பா கடந்த சனிக்கிழமையன்று பதவியேற்றார். அவர் தலைமை யிலான அரசு சட்டப்பேரவையில் நேற்று நடந்த வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், எடியூரப்பா வுக்கு தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ட்விட்டரில் வெளியிட்ட வாழ்த்து செய்தி யில், ‘‘கர்நாடக முதல்வராக தாங்கள் பொறுப்பேற்றுள்ள தற்கு என் சார்பிலும், அதிமுக சார்பிலும் வாழ்த்துகளை தெரி வித்துக் கொள்கிறேன். மாநில முதல்வராக, கர்நாடகத்தை மேலும் பல புதிய நிலைக்கு தாங் கள் உயர்த்துவீர்கள் என்று நம்புகிறேன். உங்களது ஆட்சிக் காலத்தில் இரு மாநிலங்களுக்கு இடையிலான பரஸ்பர நல்லுற வும், மாநிலங்களின் வளர்ச்சி தொடர்பான நடவடிக்கைகளும் மேலும் வலுப்பெறும் என்று நம்பு கிறேன்’’ என தெரிவித்துள்ளார்.