

சென்னை
முத்துலட்சுமி ரெட்டி பிறந்த தினமான இன்று, அரசு மருத்துவ மனைகளில் ‘மருத்துவமனை தினம்’ கொண்டாடப்படுகிறது.
இதுதொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்தியாவில் முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்த தினமான ஜூலை 30-ம் தேதி மருத்துவமனை தினமாக கொண்டாடப்பட உள்ளது. புதுக் கோட்டை மாவட்டத்தில் பிறந்த முத்துலட்சுமி ரெட்டி, சென்னை மருத்துவக் கல்லூரியில் 1907-ம் ஆண்டு படித்தார். சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவ மனை தொடங்க காரணமாக இருந்துள்ளார். பல்வேறு சமூகப் பணிகளை செய்துள்ளார். தமிழக சட்டப்பேரவையின் முதல் பெண் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
நிதி ஒதுக்கீடு
இவரது பிறந்த தினமான ஜூலை 30-ம் தேதி, மருத்துவமனை தினமாக இந்த ஆண்டு முதல் கொண்டாடப்படுகிறது. இதற் காக ஒவ்வொரு அரசு மருத்துவ மனைக்கும் நிதி ஒதுக்கீடு செய்து, குழுவும் அமைக்கப்பட் டுள்ளது. மருத்துவமனை பணி யாளர்கள், தங்கள் குடும்பத்தின ருடன் கலந்துகொள்வர்.
இவ்வாறு அமைச்சர் தெரிவித் துள்ளார்.