

சென்னை
பயணிகளுக்கு எந்த தொந்தரவும் தராமல் பச்சையப்பன் கல்லூரி உள்ளிட்ட 4 கல்லூரி மாணவர் கள் பேருந்துகளில் அமைதியாக நேற்று கல்லூரிக்குச் சென்றனர். போலீஸாரின் கடும் நடவடிக் கைகளால் இது சாத்தியமானதாக பொதுமக்கள் கூறியுள்ளனர்.
சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள், கடந்த 23-ம் தேதி பட்டாக் கத்தி போன்ற ஆயுதங்களுடன் பேருந்துக் குள்ளும் சாலையிலும் மோதிக் கொண்டனர். இதில் வசந்த் என்ற மாணவர் உட்பட 7 பேர் காயம் அடைந்தனர். மாணவர்கள் கத்தி யுடன் சக மாணவர்களை விரட்டிச் சென்று தாக்கிய காட்சி சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தின. வன்முறையில் ஈடு படும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அனைத்து தரப்பில் இருந் தும் கோரிக்கை எழுந்தது. இதைத் தொடர்ந்து மாணவர்கள் விவகாரத் தில் போலீஸார் தீவிர நடவடிக் கைகளை மேற்கொண்டனர்.
குண்டர் சட்டத்தில் கைது
பிரச்சினைகளுக்கு அடிப்படை காரணமான ‘ரூட் தல’ மாணவர்கள் 58 பேரைக் கண்டுபிடித்து, அவர்களிடம் ‘இனிமேல் தவறு செய்ய மாட்டேன்’ என்று பிரமாண பத்திரம் எழுதி வாங்கியதோடு, மேற்கொண்டு இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டால் அவர் கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என்றும் எச்சரிக்கப்பட்டனர்.
மேலும் அவர்களின் பெற் றோரை நேரில் அழைத்து வந்து, தங்களின் பிள்ளைகளை கண்டிக்கும்படியும் போலீஸார் அறிவுறுத்தினர். சில மாணவர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
மேலும், மாணவர்கள் செல்லும் பேருந்து வழித்தடங்களில், போலீ ஸாரின் கண்காணிப்பும் தீவிரப் படுத்தப்பட்டது. இதற்காக தனி குழு அமைக்கப்பட்டு, மாண வர்களின் நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு தினமும் அக்குழு அறிக்கை அனுப்பி வருகிறது.
போலீஸார் மேற்கொண்ட கடுமையான நடவடிக்கைகளால், பச்சையப்பன் கல்லூரி, நந்தனம் கல்லூரி, புதுக்கல்லூரி மற்றும் மாநில கல்லூரி மாணவர்கள் நேற்று பேருந்துகளில் பயணிகளுக்கு எந்த தொந்தரவும் தராமல் அமைதியாக கல்லூரிக்குச் சென்றனர்.
வழக்கமாக பேருந்துகளில் தாளமிட்டு பாட்டுப் பாடி சக பயணி களுக்கு தொந்தரவு கொடுத்து வந்த மாணவர்கள், இப்போது அமைதியாக பயணித்தது, பொது மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மாணவர்களைக் கட்டுப்படுத்திய போலீஸாரின் இந்த நடவடிக்கை தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாட்ஸ்-அப்பில் புகார்
இதற்கிடையே சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்தியில், ‘ரூட் தல’ என்ற பெயரில் கல்லூரி மாணவர்கள் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டால் அதுகுறித்து 9087552233 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் தெரி விக்கலாம்.
மேலும் chennai city police என்ற ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் முகவரியிலும் புகார் தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.