புதிய கல்விக் கொள்கை குறித்த ஆய்வறிக்கை: மத்திய அமைச்சர் பொக்ரியாலிடம் திமுக எம்.பி.க்கள் ஒப்படைப்பு 

புதிய கல்விக் கொள்கை குறித்த ஆய்வறிக்கை: மத்திய அமைச்சர் பொக்ரியாலிடம் திமுக எம்.பி.க்கள் ஒப்படைப்பு 
Updated on
1 min read

சென்னை

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலை திமுக எம்.பி.க்கள் சந்தித்து, புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவு குறித்த ஆய்வறிக்கையை வழங்கினர்.

புதிய தேசிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கையை மத்திய மனிதவள மேம்பாட் டுத் துறை அமைச்சகம் தனது இணைய தளத்தில் வெளியிட் டது. இதுபற்றி ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் கருத்து தெரிவிக்கு மாறு மாணவர்கள், ஆசிரியர் கள், பெற்றோர்கள், பொது மக்களை கேட்டுக் கொண்டது.

இந்தி, சம்ஸ்கிருத திணிப்பு, கல்வி வணிக மயம், மாநில உரிமைகள் பறிப்பு போன்ற அம்சங்கள் இருப்பதாகக் கூறி புதிய கல்விக் கொள்கைக்கு திமுக, காங்கிரஸ், இடதுசாரி கள் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கட்சி கள் கடும் எதிர்ப்பு தெரி வித்து வருகின்றன.

இதற்கிடையே, புதிய தேசிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கையை ஆராய்ந்து அறிக்கை அளிக்க முன்னாள் அமைச்சர்கள் க.பொன்முடி, தங்கம் தென் னரசு, கல்வியாளர்கள் அ.ராம சாமி, ம.ராசேந்திரன், பேராசிரி யர் கிருஷ்ணசாமி, பிரின்ஸ் கஜேந்திரபாபு, டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், சுந்தரவள்ளி, மக்களவை உறுப்பினர் டாக்டர் செந்தில்குமார், திமுக மாணவரணிச் செயலாளர் எழிலரசன் ஆகிய 10 பேர் கொண்ட குழுவை திமுக தலைவர் அமைத்திருந்தார். இக்குழு பல்வேறு தரப்பி னரிடம் கருத்துகளை கேட்டு அறிக்கை தயார் செய்து, கடந்த 26-ம் தேதி மு.க.ஸ்டாலினிடம் அளித்தனர்.

இந்நிலையில், டெல்லியில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலை கனிமொழி, தயாநிதி மாறன், டி.கே.எஸ்.இளங்கோவன், திருச்சி சிவா, கலாநிதி வீராசாமி உள்ளிட்ட திமுக எம்.பி.க்கள் நேற்று சந்தித்துப் பேசினர். அப்போது புதிய கல்விக் கொள்கை குறித்து திமுக குழு தயாரித்த ஆய்வறிக்கையை வழங்கி, புதிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கையை திரும் பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

திமுக எதிர்ப்பு

இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட் டர் பக்கத்தில், ‘‘இந்த தேசிய கல்விக் கொள்கை ஏழை களுக்கு எதிரானதுடன், கூட் டாட்சி தத்துவத்துக்கும் முரணானதாகும். அரசிய லமைப்பு அளிக்கும் உத்தர வாதங்களுக்கு எதிரானது. பாரபட்சமானது என்பதுடன் இந்தி திணிப்புக்கும் வழிவகுக்கிறது’’ என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in