

சென்னை
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடைகள் இன்னும் வழங்கப்படாததால் ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது.
தமிழக பள்ளிக்கல்வியில் பாடத் திட்டம் மற்றும் தேர்வு முறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதேபோல், அனைத்து அரசு, அரசு உதவி பள்ளி மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான சீருடை வழங்க தமிழக அரசு முடிவு செய்தது.
அதன்படி 1 முதல் 8-ம் வகுப்பு வரை ஒரு சீருடையும். 9, 10-ம் வகுப்புக்கு தனி சீருடையும், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புக்கு தனி சீருடையும் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை யான சீருடையின் வண்ணம் குறித்து கருத்து வேறுபாடுகள் எழுந்ததால், அந்த சீருடை மாற்றப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கடந்த டிசம்பர் மாதம் அறிவித்தார்.
அதன்படி நடப்பு ஆண்டில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக 1 முதல் 5-ம் வகுப்புக்கு கரும்பச்சை கீழாடை, கட்டம் போட்ட வெளிர் பச்சை மேலாடை, 6 முதல் 8-ம் வகுப்புக்கு சந்தன நிறத்தில் கீழாடை, கட்டம் போட்ட மேலாடை மற்றும் சந்தன நிற மேல் கோட்டும் புதிய சீருடையாக மாற்றப்பட்டன.
வழக்கமாக பள்ளிகள் திறந்த 2 வாரத்தில் ஒரு மாணவருக்கு 2 செட் சீருடைகள் இலவசமாக வழங்கப்படும். அதற்குப் பின்னர் கால இடைவெளி விட்டு மேலும் 2 செட் சீருடைகள் வழங்கப்படும். ஆனால், இந்த ஆண்டு சீருடை வழங்குவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது.
இதுகுறித்து அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது: தமிழ கத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் 40.66 லட்சம் மாணவர் களுக்கு ஆண்டுதோறும் 4 செட் சீருடைகள் இலவசமாக வழங்கப் படும். இந்த ஆண்டு 1 முதல் 8-ம் வகுப்புக்கு சீருடையின் நிறம் மாற்றப்பட்டது. இதற்குரிய மாதிரி புகைப்படம், அரசாணை கடந்த டிசம்பர் மாதமே வெளியானது. ஆனால், இன்னும் சீருடைகள் முழு மையாக வழங்கப்படவில்லை. தொடர் போராட்டங்களுக்குப் பின் னரே உயர்நிலை வகுப்புக்கான புதிய சீருடைகள் கடந்த வாரம் விநியோகிக்கப்பட்டன. ஆனால், எல்லா வகுப்புகளுக்கும் சீருடை கள் தரப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் கையெழுத்து வாங்கப் படுகின்றது.
மறுபுறம் தொடக்கநிலை வகுப்பு மாணவர்களுக்கு சீருடைகள் தயா ரிப்பு இன்னும் முடியவில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதனால் புதிதாக சேர்ந்த மாண வர்கள் சீருடை அல்லாத வண்ண உடைகளில் வருகின்றனர். இதர மாணவர்களை பழைய சீருடையில் வரக்கூறியுள்ளோம். ஆனால், அரசின் இலவச சீருடைகளின் தரம் ஓராண்டுக்கு மேல் நீடிக்காது. இதனால் வசதியுள்ளவர்கள் சொந்த செலவில் புது உடைகளை அணிந்து பள்ளிக்கு வருகின்றனர். அதேநேரம் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்கள் பலவிதமான சிரமங்களைச் சந்திக்க வேண்டி உள்ளது.
கிழிந்த ஆடைகளை அணிந்து பள்ளிக்கு வரமுடியாது. சீருடை அல்லாத பிற துணிகளை அணிந் தால் பஸ்பாஸ் மூலம் பேருந்தில் பயணிப்பதில் சங்கடங்கள் ஏற்படு கின்றன. இதேபோல், புதிய மாண வர்களும் சீருடை இல்லாததால் பணம் கொடுத்து பேருந்துகளில் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. இது ஏழை மாணவர் களுக்கு மனஉளைச்சலை தருவ தால் கற்றல் செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் வேறுவழியின்றி பெற்றோர்களும் சொந்த செலவில் சீருடைகள் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற் பட்டுள்ளது.
மாநிலம் முழுவதுள்ள 80 சதவீத பள்ளிகளில் இதே நிலை தான் நீடிக்கிறது. எனவே, இலவச சீருடையை விரைந்து வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையே சீருடைகள் தயா ரிப்பு பணி இதுவரை 40 சதவீத அளவுக்கே முடிந்துள்ளதால், அனைத்து மாணவர்களுக்கும் முழுமையாக சீருடைகள் வழங்க செப்டம்பர் மாதம் வரை ஆகி விடும் எனவும் தகவல்கள் வெளி யாகியுள்ளன. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:
இலவச சீருடை தயாரிப்புக்கான ஒப்பந்த ஒதுக்கீட்டில் பல்வேறு குளறுபடிகளால் இழுபறி நீடித் தது. சிக்கல்களைக் களைந்து ஏப்ரல் மாதம் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டபோது மக்களவைத் தேர்தல் அறிவிப்பு வெளியானது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால் சீருடை, புத்தக அச்ச டிப்பு உள்ளிட்ட அனைத்து பணி களும் முடங்கிவிட்டன.
முதல்கட்டமாக உயர்நிலை வகுப்புகளுக்கு சீருடைகள் வழங் கப்பட்டு வருகின்றன. தொடக்க நிலை வகுப்புகளுக்கு ஆகஸ்ட் 2-ம் வாரத்துக்குள் 2 செட் சீருடைகள் அளிக்கப்படும். மீதமுள்ள 2 செட் சீருடைகளும் செப்டம்பர் மாதத்தில் வழங்கப்படும்.
இதேபோல், மாண வர்களுக்கு புத்தகப் பை, ஷூ, வண்ண பென்சில், ஜியாமெட்ரி பாக்ஸ் உட்பட இதர இலவச பொருட் களும் படிபடியாக அக்டோபர் மாத இறுதிக்குள் வழங்கப்படும்.
இவ்வாறு அரசுப் பள்ளி ஆசிரி யர்கள் கூறினர்.
- சி.பிரதாப்