

ஓய். ஆண்டனி செல்வராஜ்
கொடைக்கானல் மலையில் புலிகள், சிறுத்தைகள் உட்பட 20 வகை வன விலங்குகள் இருப்ப தாக கணக்கெடுப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் புலிகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக வனத் துறை தெரிவித்துள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள முக்கிய கோடை வாசஸ் தலம் கொடைக்கானல்.இங்கு ஆண்டுக்கு 45 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். கொடைக்கானல் காடுகளை வனவிலங்குகளின் வாழ்விடமாகக் கருதாமல் சுற்றுலாத் திட்டங்களுக்கு அரசு முக்கியத்துவம் கொடுக்கிறது.
இதனால் காடுகள் அழிக்கப் பட்டு கான்கிரீட் கட்டிடங்களாக மாற்றப்பட்டதால் பெரும்பாலான வனவிலங்குகள் வாழ்விடத்தை இழந்தன. கொடைக்கானல் காடுகளில் சிறுத்தைப்புலி, காட்டு மாடுகள், புலி உள்ளிட்ட முக்கிய வன உயிரினங்களை வேட்டைக் கும்பல் வேட்டையாடி அழித்து வருகின்றனர். அதனால், கொடைக்கானலில் வனவிலங் குகள் எண்ணிக்கை குறைந்து வரு கிறது. இந்நிலையில் மதுரை நெல் பேட்டையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஹக்கீம் என்பவர் கடந்த 5 ஆண்டு வனவிலங்கு கணக் கெடுப்பு தொடர்பான விவரங் களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்றுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:
கொடைக்கானல் வனத்தில் 2015-16, 2016-17, 2017-18, 2018-19, 2019-20 ஆகிய ஆண்டுகளில் வனவிலங்குகள் கணக்கெடுப்பை எங்களது மக்கள் விழிப்புணர்வு அறக்கட்டளை சார்பில் பெற் றோம். கொடைக்கானல் வனத்தில் தற்போது 4 புலிகள், 12 சிறுத்தைகள் உட்பட 20 வகையான வன உயிரி னங்கள் இருப்பதாகவும் அவற் றின் எண்ணிக்கை அதிகரித்துள்ள தாகவும் வனத் துறை தெரிவித் துள்ளது.
2015-16-ல் 1,043 வன உயிரினங் களும், 2016-17-ல் 1,129 வன உயிரினங்களும், 2017-18-ல் 1,428 வன உயிரினங்களும், 2018-19-ல் 1,526 வன உயிரினங்களும் இருப் பதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரிவித் துள்ளனர். 2019-20-ம் ஆண்டுக்கான கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இருபது வகையான முக்கிய வன விலங்குகள் வாழும் கொடைக் கானல் மலையில் பல்லுயிரிகள் பெருக்கத்துக்கு வனத் துறை பாது காப்பு ஏற்பாடுகளை செய்ய வில்லை. சுற்றுலாத் தலங்களுக்கு வரும் மனிதர்களுக்கு வனவிலங்குகளிடம் இருந்து பாதுகாப்பு இல்லை. ஒரு புலி இருந்தால்கூட வன பாதுகாப்பு சட்டப்படி புலிகள் சரணாலயம் அமைக்க வழியுள்ளது. இங்கே 4 புலிகள் உள்ளன. தண்ணீ ருக்கு மனிதனே கஷ்டப்படும் இக்காலத்தில் வன விலங்குகளுக்கு தண்ணீர் கஷ்டம் வந்தால் ஊருக்குள் வருவதை தவிர்க்க முடியாது. அதனால், சுற்றுலா மேம்பாட்டுத் திட்டங்களை கைவிட்டு கொடைக்கானல் காடு களைப் பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.